தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் ரூ.300 கோடி அளவில் முதலீடுகளை ஈர்த்து 3000 பேர் வேலை வாய்ப்பு பெரும் வகையில் சுமார் 150 ஏக்கரில் சின்ன கோவிலாங்குலம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை இன்று மாலை தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி .ஆர். பி ராஜா நேரில் ஆய்வு செய்கிறார். சிப்காட் தொழில் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்ய வரும் அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவுக்கு குருக்கள்பட்டியில் வைத்து மாலை 4:30 மணியளவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






