காணாமல் போன மாரியம்மன் சிலைகள் உடைந்த நிலையில் கண்டெடுப்பு!

நெல்லை மாவட்டம் பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல் குளம் ஊரில் அமைந்துள்ள
அக்காள் தங்கை மாரியம்மன் கோவில் நெல்லையில் மிகவும் புகழ்பெற்ற கோவில் ஆகும். அனைத்து சமுதாயத்தினரும் ஒன்று கூடி கோவில் கொடை விழா நடத்துவது சிறப்பு ஆகும் இந்த விழாவில் அம்மனுக்கு விழாவில் முக்கியமானதாக கருதப்படும் அக்கால் தங்கை சிலைகளை களிமண்ணால் செய்யப்பட்டு பூஜித்து வழிபாடு செய்து கோவில் கொடை விழா அன்று ஊருக்கு வெளியே காட்டுப் பகுதியில் கொண்டு சென்று வைப்பனர். இந்த சிலைகள் 17.07.2025 அன்று காணாமல் போனதாக திருப்பணி கற்றல் குளம் ஊர் மக்கள் சார்பாக பேட்டை காவலில் புகார் அளிக்கப்பட்டது.இந்த நிலையில் சிலையினை காவல்துறையினர் தேடிவந்த நிலையில் காந்திநகர் அடுத்துள்ள வெள்ளாளர் குளம் ஊரில் அருகில் குளத்து பகுதியில் உடைந்த நிலையில் காணப்பட்ட சிலையினை அப்பகுதியில் சேர்ந்த ஆடு மேய்த்தவர் திருப்பணிகரில் குளம் ஊர் பொதுமக்களிடே சிலைகள்  உடைந்து கிடப்பதாக தகவல் கொடுத்தனர்,தகவலின் அடிப்படை யில் ஊர் மக்கள் காவல்துறையில் தகவல் தெரிவித்தனர். தற்போது அந்த சிலைகள் மீட்டு மீண்டும் கோவி லுக்கு கொண்டு சென்று வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சிலைகளை வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.