விருதுநகர் மாவட்ட தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி !

முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை:விரு­து­ந­கர் மாவட்­டம், சிவ­காசி வட்­டம்,நார­ணா­பு­ரம் கிரா­மத்­தில் இயங்­கி­வ­ரும்தனி­யா­ருக்­குச் சொந்­த­மான பட்­டாசு ஆலை­யில் 21.07.2025 பிற்­ப­கல் சுமார் 3.50 மணி­ய­ள­வில் எதிர்­பா­ரா­த­வி­த­மாக ஏற்­பட்ட வெடி­வி­பத்­தில் கீழத்­தி­ருத்­தங்­கல், முத்­து­ரா­ம­லிங்­கம் கால­னி­யைச்சேர்ந்த கார்த்­திக் (வயது23) மற்­றும் இரண்டு நபர்­கள் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தனர் என்ற துய­ர­க­ர­மான செய்­தி­யைக் கேட்டு மிக­வும் அதிர்ச்­சி­யும் வேத­னையும் அடைந்­தேன்.மேலும், இவ்­வி­பத்­தில் காய­ம­டைந்து சிவ­காசி அரசு மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரும் நாக­லட்­சுமி (வயது 55), மாரி­யம்­மாள் (வயது 53) மற்­றும் மாரி­யம்­மாள(வயது 50) ஆகிய மூன்று நபர்­க­ளுக்கு சிறப்பு சிகிச் சை அளிக்­கவும் உத்­த­ர­விட்­டடுள்­ளேன்.இந்த விபத்­தில்,உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் அவர்­க­ளது உறவினர்­களுக்கும் எனது ஆழ்ந்த இரங்­கலை­யும், ஆறு­த­லை­யும் தெரி­வித்­துக் கொள்­வ தோடு, உயிரிழந்­த­வர்­க­ளின குடும்­பத்­தி­ன­ருக்கு தலா நான்கு இலட்­சம் ரூபா­யும், பலத்த காய­ம­டைந்து மருத்­து­வ­ம­னையில் சிகிச்சை பெற்று வரு­ப­வ­ருக்கு ஒரு இலட்­சம் ரூபா­யும்,இலேசான காய­ம­டைந்து மருத்­து­வ­னையில் சிகிச்சை பெற்று வரு­ப­வர்­க­ளுக்கு தலா ஐம்­பதாயி ரம் ரூபாயும் முத­லமைச்­ச­ரின் பொது நிவா­ரண நிதி­யி­லி­ருந்து வழங்­கி­ட­வும் உத்­த­ர­விட்­டுள்­ளேன் என அறி­வித்­துள்­ளார்.