தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமக்களுக்கு இலவசமாக பட்டு சேலை வழங்கப்படும்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி!

கும்பகோணம்: தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமக்க ளுக்கு இலவசமாக பட்டு சேலை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் வாக்களித்துள்ளார்.

கும்பகோணத்தில் அதிமுக பொதுச் செயலாளர் இ பி எஸ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சி யினர் அதிமுகவை இணைந்தனர் இந்த நிகழ்ச்சியில் இபிஎஸ் பேசிய தாவது திமுக ஆட்சியில் விவசாயி களுக்காக எந்த திட்டமும் இல்லை. மக்கள் சேவையில் முதன்மையான கட்சி என்றால் அதிமுக தான் ஆட்சிக்கு வந்து பின் நெசவாளர் களுக்கு தரமான பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் கைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து விட்டது அதிமுக ஆட்சியில் விசைத்தறியாளர்களின் நலன் காக்க பட்டது முடிந்த அளவுக்கு உங்களுக்கு நன்மை செய்யும் விதமாக அதிமுக ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டத்து டன் மணமக்களுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும் பாரம்பரியமாக நெசவுத்தொழில் ஈடுபடுவோரை வாழ வைக்கும் வகையில் அதிமுக ஆட்சிஅமையும் போது அரசு நடவடிக்கைகள் எடுக்கும் அன்றைக்கு உற்பத்தி செய்யப்படும் துணிக்கு அன்றைய தினமே பணம் கொடுக்கும் நிலை உருவாக்கப்படும் எவ்வாறு இபிஎஸ் பேசினார்.