தேவேந்திரகுல வேளாளர்கள் சமுதாயத்தை பட்டியல் வகுப்பிலிருந்து மாற்ற கோரி டெல்லியில் ஒற்றுமையாக திரண்ட சமூகம். தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் வகுப்பிலி ருந்து(SC) மாற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (OBC) சேர்க்கவ லியுறுத்தி டெல்லியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும்நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா,டெல்லி ஆகிய மாநிலங்களை சேர்ந்த தேவேந்திரகுலவே ளாளர்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் அடையாள கவன ஈர்ப்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டத் தை நடத்தினார்கள். குறிப்பாக, தேவேந்திரகுல வேளாளர்சமுதாயத் தை பட்டியலில்(SC) இருந்து நீக்கி இதரபிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (OBC) சேர்க்க வேண்டும் என வலி யுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து1000க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத் தை சார்ந்தவர்கள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். இந்த கவனயீர்ப்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களின் கேள்விகளுக்க கு பதில் அளித்த தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் மல்லர் சுவாமிநாதன் அவர்கள், சேர-சோழபாண்டியர்களின் வம்சா வழியினரான தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினரை எப்படி பட்டியல் வகுப்பில் சேர்க்கப்பட்டனர்? என்ற கேள்வியோடு, பூர்வீக தமிழ் குடி வேளாண்குடி மக்களை சேர்த்தது தவறு எனவும் தங்களது சமுதாயத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் (OBC) சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.மேலும் இதற்கான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் விரைந்து செயல் படுத்திட வேண்டும் எனவும், தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எங்களது கோரிக்கைகளை எந்த கட்சி நிறைவேற்றப்படும் எனவாக்குறுதி யார் கொடுக்க முன் வருகிறார்களோ அவர்களுக்கு தங்கள் சமுதாய மக்கள் வரும் தேர்தலில் வாக்குகளை செலுத்துவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் ஈரோடு திரு காமராஜ் அவர்கள் முன்னிலை யில் டெல்லி மாநில தேவேந்திரகுல வேளாளர் சங்க தலைவர் A.V. மணி, பொறுப்பாளர் .I.C.பாண்டி, காளி முத்து , மகாராஷ்டிரா மாநில தேவேந்திர குலவேளாளர் சங்க தலைவர் K.K.பெருமாள் , தமிழகதே வேந்திர குல வேளாளர் சங்க பொறு ப்பாளர்கள்ஆவடி K.ராஜேந்திரன், லயன் சிவகுமார்,A.குமரராஜா, .முத்து முனியாண்டி, தேவேந்திரகுல வேளாளர் சங்க பெண்கள் அணி பொறுப்பாளர்கள் திருமதி.நளினி சாந்தகுமாரி திருமதி.சுப்புலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். பலமாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்த சமூக மக்களுக்கும்,சமூக முன்னோடிகளுக்கும், நன்றியும் வாழ்த்துக்களும்.
தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை பட்டியல் வகுப்பிலிருந்து(SC) மாற்றி இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில்(OBC)சேர்க்க வலியுறுத்தி டெல்லியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரத ஆர்ப்பாட்டம்!






