மயிலாடுதுறை, ஜூலை.19 – நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக,தனக்கு இத்தனை டார்ச்சர்களை உயரதிகாரிகள் கொடுப்பதாக கூறிய மயிலாடு துறை மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன், தான் நேர்மையற்றவன் என்பதை நிரூபித்தால் அலுவலக வாசலிலேயே வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியிருந்தார். இதற்கு பதில்அளிக்கும் வகையில் விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு காவல் துறை , டிஎஸ்பி சுந்தரேசன் மீது இது வரை எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் என்னென்ன என்று பட்டியல் போட்டிருக்கிறது.மயிலாடு துறை மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் நேற்று செய்தியாளர் களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, உயரதிகாரிகள் மீது பல குற்றச் சாட்டுகளை தெரிவித்தார். குறிப்பாக,காஞ்சிபுரத்தில் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் கஸ்தூரி கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை மாற்று மாறு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவா சீர்வாதம், உளவுத்துறை ஐ ஜி செந்தில்வேல் ஆகியோர் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். ஆனால், அவர்களின் உத்தரவுக்கு இணங்க மறுத்த காரணத்தால், மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி. ஸ்டாலினை தூண்டிவிட்டு, தன்னை மிகவும் டார்ச்சர் செய்வதாக சுந்தரேசன் குற்றம் சாட்டினார். தனது வாகனத்தை வேண்டு மேன்றே தன்னிடம் இருந்து எஸ்.பி.பறித்து விட்டதாகவும், அதனால் தற்போது வீட்டில் இருந்து, தினமும் அலுவலகத்துக்கு தான் நடந்தே வருவதாகவும் சுந்தரேசன் கூறியிருந்தார்.மேலும் நேர்மையாக இருக்கும் ஒரே காரணத்துக்காக, தனக்கு இத்தனை டார்ச்சர்களை உயரதிகாரிகள் கொடுப்பதாகவும், தான் நேர்மையற்றவன் என்பதை நிரூபித்தால் அலுவலக வாசலிலே யே வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராக இருப்பதாகவும் டிஎஸ்பி சுந்தரேசன் பேட்டியின் போது கூறியிருந்தார்.அதற்கு பதில் அளிக்கும் வகையில் காவல் துறை எடுத்த நடவடிக்கைககளை பட்டியிலிட்டுள்ளது. 1) கடந்த 05.11.2005 முதல் 25.01.2006 வரையிலும்,மீண்டும் 26.06.2006 வரையிலும் சென்னை நந்தம் பாக்கம் காவல் நிலைய குற்ற எண்.42/2006மற்றும் 43/2006 வழக்கு கோப்புகளில் திமிஸி மற்றும் கைது அட்டையை தவிர,வேறு எந்த ஆவணங்களும் இல்லாததை உயரதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதற்காக அங்கு பணியில் இருந்த சுந்தரேசனுக்கு 3 ஆண்டுகளுக்கான சம்பள உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டது .2 ) திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற எண்.223/02 பிரிவு 448, 427, 379,448, 427 மற்றும் குற்ற எண்240/02 பிரிவு 294 (பி), 323, 324,447, 506(2) ஆகிய வழக்கு விவரங்களை மறைத்து,பாஸ்போர்ட் வழங்க பரிந்துரை செய்ததாக சுந்தேரசன் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதை யடுத்து, பணியில் பொறுப்பு இல்லாமல் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதாக சுந்தரேசன் மீது ‘சென்சர்’ (censure) நடவடிக்கை எடுக்கப்பட்டது. 3) சென்னை மாநகரம் ஜே.2 துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் சுந்தரேசன் பணி புரிந்த போது, ராதாபுரம் 6- வது தெருவில் வசிக்கும் தமீன் அன்சாரி என்பவரை திருட்டு விசிடி, டிவிடி படங்களை விற்க அனுமதி அளித்தும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அவரிடம் இருந்து ரூ. 40 ஆயிரத்தை சுந்தரேசன் கையூட்டாக பெற்றதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது.வீ) சென்னை மாநகரம் ஜே.2 துரைப் பாக்கம் காவல்நிலையத்தில் சுந்தரேசன் பணிபுரிந்த போது, டவுன் பஞ்சாயத்து துணைத் தலைவர் சீனிவாசன் மற்றும் முதல் தெருவைச்சேர்ந்த பெருடி ஆகியோர் தொடர்பான முடிவுற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி,குண்டர் சட்டத்தில் அவர்களை அடைத்து விடுவதாக மிரட்டி,அவர்களி டம் இருந்து ரூ.40 ஆயிரத்தை லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.வீவீ) ஜே.2 துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் பணிபுரிந்த போது, டாஸ்மாக் பாரின் உரிமையாளர்கள் மணி மற்றும் சண்முகசுந்தரத்தை சுந்தரேசன் மிரட்டி,அவர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ. 3,000 கையூட்டாக பெற்று முறை கேடாக நடந்து கெரண்டது கண்டறியப்பட்டது. iii) ஜே.2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, பன்னுசேகர் என்பவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டும் கூட, அவரை நீதிமன்றத்தில் சுந்தரேசன் ஆஜர்படுத்தாமல் இருந்தது தெரிய வந்தது. வீ ஸ் ) அதே ஜே . 2 துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது, டீக் கடைகாரர் ஒருவரிடம் மாதந் தோறும் லஞ்சம் பெற்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. iv) தனது வீட்டில் சிலிண்டர் காணாமல் போனதாக பெண் ஒருவர் அளித்த புகாரை சுந்தரேசன் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவில்லை . வெறும் வாய் வழியான புகாரை மட்டுமே அடிப்படையாக கொண்டு, திருடு போன சிலிண்டரை சுந்தரேசன் மீட்டுக் கொடுத் திருக்கிறார்.பின்னர், அவருடன் தவறான உறவிலும் சுந்தரேசன் இருந்திருக்கிறார். V) பின்னர், காவல் ஆய்வாளர் சபாபதி மற்றும் எழுத்தர் கனகராஜ் மீது தனக்கு இருந்த காழ்ப் புணர்ச்சி காரணமாக,மேற்கூறிய பெண்ணை கடுமையாக தாக்கி அவர்கள் மீதே பொய் புகாரை கொடுக்கச்செய்திருக்கிறார்.மேலும், இது தொடர்பாகல் வேறு குற்றங்களுங்காக 2ஆண்டுகளாக சுந்தரேசனின் சம்பள உயர்வை நிறுத்திவைத்துஅவருக்கு தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது. இது போன்ற பல துறை ரீதியான தண்டனைகள் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று காவல் துறை நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது.
மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரேசன் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்: பட்டியலிட்டு காவல்துறை விளக்கம்!






