விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் காது மூக்கு  தொண்டை மருத்துவராக பணி புரிந்து வருபவர் ரமேஷ்பாபு (50). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் அருகே உள்ள சின்ன கடை பஜார் பகுதியில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் மருத்துவமனையில் பணி முடிந்து திரும்பிய பொழுது திடீரென வந்தராஜ பாளையம் ஆவரம் பட்டி பகுதியைச் சேர்ந்த  பாண்டிகணேஷ் ( 31) என்பவர் மருத்துவர் ரமேஷ்பாபுவை இழுத்து போட்டு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். கத்தியால் குத்திய நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். மருத்துவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மூன்று இடங்களில்  வெட்டு காயங்கள் இடம் பெற்றுள்ளது. தகவல் அறிந்து வந்த காவல் துறை யினர் மருத்துவரை கத்தியால் குத்திய நபரை கைது செய்தனர். விசாரணயில் கத்தியால் குத்திய நபர் ராஜ பாளையம் ஆவாரம் பட்டி பகுதியைச்சேர்ந்த பாண்டிய கணேஷ் ஏற்கனவே ஸ்ரீவில்லி புத்தூர் அரசு மருத்துவமனையில்  தற்காலிககாவலாளியாக பணி புரிந்தவர் என்பது மருத்து வருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறு பாடு இருந்ததாகவும் கூறப்படுகி றது. ஸ்ரீவில்லி  புத்தூர் நகர் காவல் துறை-யினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்க்கனவே ஸ்ரீவில்லிபுத்தூரில்பல இடங்களில் கஞ்சா குட்கா ,பூலிப்,  கனேஷ் புகையிலை ,நம்பர் லாட்டரி, தங்குதடையின்றி கிடைக்கின்றன இரவு பகலாக தனியார் பார்கள்,டாஸ்மார்க்கில் மது பானங்கள் எந்த நேரமும் தங்கு தடை- யின்றி கிடைப்பதால் இது போன்ற சட்ட விரோதமாக செயல் படுவதால் சமூக விரோதிகள் மிகவும் சாதாரணமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் நடைபெற்ற இந்த தாக்கு தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் திரு கண்ணன் அவர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமேன  பொது மக்க ள் கோரிக்கையாக உள்ளது.