களக்காட்டில் எஸ்டிபி கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு!

வள்ளியூர்.ஜூலை 16- களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியினர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா
கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் காமாராஜர் சிலைக்கு மாலை அணி வித்தனர் நெல்லை மாவட்டம் களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கல்வி தந்தை கர்மவீரர்
காமராஜரின் 123 வது பிறந்த நாள்விழா நிகழ்ச்சி எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொருளாளர்
இளையாராஜா தலைமையில் நேற்று களக்காடு அண்ணாசிலை மெயின்ரோட்டில் காமாராஜர்
சிலைக்கு ஊர்வலமாக சென்று பூமாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதில் நெல்லை
புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே.பீர்மஸ்தான், மாவட்ட துணை தலைவர் களந்தை மீராசா , அமைப்பு பொதுச்செயலாளர் முல்லை மஜீத்,மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், வர்த்தகர் அணி மாவட்ட துணை தலைவர் பீமாஸ்உசேன், அம்பை தொகுதி தலைவர் கலில் ரகுமான்,
துணை தலைவர் சுரேஷ்,சாமுவேல், களக்காடு நகர தலைவர் பக்கீர் முகைதீன், நகர செயலாளர் காஜா முகைதீன் ஆகியோர் உட்பட எஸ்டிபிஐ கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.