சேரன்மாதேவியில் காமராஜர் பிறந்த நாள் விழா!

சேரை,ஜூலை.16- பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர்
மாலை அனைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நாடார் சங்கத்தலைவர் தேவதாசன் ரத்தினசாமி
தலைமை வகித்து காமராஜரின் சிறப்புகள் சேவைகள் பற்றி எடுத்துக் கூறினார். விழாவில்
செயலாளர் ராமச்சந்திரன்,பொருளாளர் சக்திவேல், மாவட்டகவுன்சிலர் சாலமோன் டேவிட்,
முன்னாள் மாவட்ட அரசு வக்கீல் சிவலிங்கமுத்து, வக்கீல் தேவசகாயம், கவுன்சிலர்கள் முருகன் ரவிச்சந்தர், அனி,தொழிலதிபர் வினோத், ராஜாராம்,பொன்ராஜ், ஜெபமணி, தானியேல் யோசப் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது
உருவப்படத்திற்கு அ.தி.மு.கவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம்,நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார், ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் செல்வக்குமார், நகரதகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகாராஜன், உட்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சேரன்மாதேவி பாரதிய ஜனதா கட்சி சார்பில், பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்த நாளை கொண்டா டும் விதமாக,சேரன்மாதேவி பேருந்து நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப் படத்திற்கு, சேரன்மாதேவி பா.ஜ.க ஒன்றிய தலைவர் வக்கீல் அஸ்வின் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.இதில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க சுற்றுப்புற சூழல் பிரிவு மாநில தலைவர் கோபிநாத்,திருநெல்வேலி பா.ஜ.க வடக்கு மாவட்ட துணைத் தலைவர் லட்சுமண ராஜா மற்றும் திரளான பா.ஜ.கவினர் கலந்த கொண்டனர்.