12 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம்:- துரை வைகோ!

கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை – வைகோ

திருச்சி,12 தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்பதே ம.தி.மு.க.வின் விருப்பம் என்று துரை வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-அரசியலில் தவறு நடப்பது இயல்புதான்.செய்ததவ றை(அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை) ஒப்புக் கொண்டு வைகோ பேசியுள்ளார். அந்தக்கா லத்தில் ம.தி.மு.க.வைத்த கூட்டணி வரலாற்றுப் பிழை, அதில் அவருக்கு அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால் , எம்.ஜி.ஆரையோ, ஜெயலலிதாவையோ கொச்சைப் படுத்திபேசவில்லை. மல்லை சத்யா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து வைகோ முடிவேடுப்பார். தி.மு.க. வில் தற்போது சேர்க்கப்பட்டவர், 3 ஆண்டுகளுக்கு முன்பே ம.தி.மு.க. வில் இருந்து நீக்கப்பட்டவர்.மேலும் 11பேர் நீக்கப்பட்டு உள்ளனர். ம.தி.மு.க.வுக்கு அங்கீகாரம் பெறுவது முக்கியம். அதற்கு குறைந்த பட்சம் 10, 12 தொகுதி களில் போட்டியிட்டு, 8 தொகுதியில் வெற்றி பெற்றால் தான் அங்கீகாரம் கிடைக்கும். இதுதான் எங்களது கட்சியினர் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக திருச்சி யில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை . கூட்டணிஆட்சியை நான் விரும்ப வில்லை,அதனை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் 2026 -ம் ஆண்டி லும் ஆட்சியை தொடர்ந்து நடத்து வார்.தி.மு.க. அறுதி பெரும்பான் மை பெறும் என்பதால் கூட்டணி ஆட்சிபற்றிய பேச்சு எழாது. தி.மு.க. கூட்டணியில் அதிருப்தி இருப்ப தாக எழுந்த செய்திகள்அனைத்தும் பொய். இவ்வாறு அவர் கூறினார்.