சென்னை : வனிதா விஜய குமார் இயக்கி,நடித்துள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர் ’ படத்தில் தனது அனுமதி யின்றி ‘சிவராத்திரி..’பாடலை பயன்படுத்தியாக இசையமைப் பாளர் இளைய ராஜா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள் ளார். தமிழ் சினிமாவில் இப்போது வரும் புதியபடங்களின்பாடல்கள் ஹிட்டாகிறதோ இல்லையோ… பழைய படங்களின் பாடல்களை
பயன்படுத்தி வரவேற்பை பெற்று வருகின்றனர்.சமீபகாலமாக இந்த போக்கு அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளையராஜாவின் பாடல்களை அதிகம் பயன் படுத்தி வருகின்றனர். இதனால் அவ்வப் போது சர்ச்சைகளும்,வழக்கு பாய்வதும் தொடர்கிறது. ‘எனது அனுமதியின்றி எனது பாடல்கள் பயன்படுத்துதாக’சில படங்களுக்கு நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார். குறிப்பாக மலையாள படமான ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’படத்தில் இடம்பெற்ற ‘கண்மணிஅன்போடு காதலன்…’ பாடல்,அஜித் நடித்த ‘குட் பேட்அக்லி’ படத்தில் இடம்பெற்ற
‘ஒத்த ரூபா தாரேன்…’பாடல் உள்ளிட்டவைகளுக்காக படக்குழு மீது நஷ்ட ஈடுகேட்டு இளைய ராஜா வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் நடிகை வனிதா விஜய குமார் இயக்கி, ராபர்ட் மாஸ்டர் உடன் இணைந்து அவர் நாயகியாகவும் நடித்துள்ள படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இதை வனிதாவின் மகள் ஜோவிகா தயாரித்துள்ளார். இந்தப் படம்,நேற்று ரிலீஸாகி உள்ளது. இதில் கமல் நடிப்பில் சிங்கீதம் சீனி வாசன் இயக்கத்தில், இளையராஜா இசைய மைப்பில் வெளியான ‘மைக்கேல் மதன காமராசன்’ படத்திலிருந்து ‘சிவராத்திரி…’என்ற பாடலை பயன்படுத்தி உள்ளனர். இந்த படாலை தனது அனுமதி யின்றி பயன் படுத்தியதாக கூறி இளையராஜா சென்னை ஐகோார்ட் டில் வழக்கு தெரடர்ந்துள்ளார்.இந்த பாடலை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இல்லையேல் நஷ்ட ஈடு கேட்கப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் திங்கள் அன்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப் படும் என நீதிபதி தெரிவித்துள் ளார். இதனிடையே இந்த படத்தில் இந்த பாடலை பயன் படுத்தியதற் காக படக்குழுவினர் இளையராஜா விற்கு நன்றி கார்டு போட்டுள்ளனர். மேலும் பாடலை அனுமதி பெற்று பயன்படுத்தியதாக வனிதாதரப்பில் தெரிவிக்கின்றனர்.
அனுமதியின்றி – சிவராத்திரி பாடல் வனிதா மீது வழக்கு தொடர்ந்த இளையராஜா!






