விசாரணை வளையத்தில் காவல் துணை ஆணையர் பாண்டியராஜன்;
இன்ஸ்பெக்டர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
சென்னை, ஜூலை.12 – ஆந்திர பிரதேச மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த நவீன் பொலினேனி. இவர் கடந்த மூன்றரை ஆண்டுகளாக திருமலாபால் நிறுவனத்தின் நிதி மேலாளராக பணி யாற்றி வந்தார். இந்த நிலையில் நவீன் மீது ரூ.40 கோடி நிதி முறைகேடு
புகார் எழுந்துள்ளது. நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்ததாகவும்,பணத்தை அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் வங்கி கணக்குக்கு மாற்றி மோசடியில் ஈடுபட்டதாகவும்
குற்றச்சாட்டு எழுந்தது.இதன் பின் அந்த நிறுவனம் சார்பாக காவல்துறையில் ஜூலை கடைசி வாரத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதே போல் ஜூலை 25ஆம்தேதி கொளத்தூர் காவல் துணை ஆணையர் பாண்டியராஜனிடமும் புகார் அளிக்கப்பட்டது. இதன் பின் விசாரணை செய்ய மாதவரம் குற்றப்பிரிவுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் திடீரென நவீன் பொலினேனி 2 நாட்களுக்கு முன் பாக தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, தனது குடும்பத்தினருக்கும், நிறுவன அதிகாரிகளுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில்,எனது தவறை உணர்ந்து விட்டேன்.ஏற்கனவே கையாடல் செய்த ரூ.5 கோடியை நிறுவனத் திடம் திரும்ப கொடுத்து விட்டேன். எனது தற்கொலைக்கு நிறுவனத் தில் பணிபுரியும் 2 உயர் அதிகாரி களே காரணம்.அவர்கள் நான் கையாடல் செய்த பணத்தில் பங்கு கேட்டு மிரட்டினர். அது மட்டுமல்லா மல், Professionals கொடுக்கவில்லை என்றல்,காவல்துறை மூலம் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வைப்போம் என்று மிரட்டினார்கள்.இதனால் தற்கொலை முடிவு எடுத்துள்ளேன் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர்
காத்திருப் போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.இந்த நிலை யில் நவீன் பொலினேனி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. உடற்கூராய்வு அறிக்கையில்அவர் 100 சதவிகிதம் தற்கொலைசெய்து கொண்டதாக கூறப் பட்டுள்ளது. ஆனால் நவீன் தற்கொலை செய்த பின் உடல் மீட்கப்பட்டபோது கைகள் கட்டப் பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தாகஎஃப் ஐ ஆரில் கூறப்பட்டிருக் கிறது. அதுமட்டு மல்லா மல் நவீன் தற்கொலை செய்து கொண்ட இடத்தில் நாற்காலிகளே இல்லை. ஆனால் அங்கிருந்த சிமெண்ட் மூட்டைகள் மீது ஏறி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது. அதேபோல் நவீன் மீட்கப்பட்டது தொடர்பாக காவல் துறை-யினரிடம் தெளிவான விளக்கம் அளிக்கப்பட வில்லை. இந்த நிலையில், தனியார் பால் நிறுவனத்திடமிருந்து எப்போது புகார் வரப்பெற்றது என்பது குறித்து கொளத்தூர் காவல்துறை துணைஆணையரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும், திருமலா பால் நிறுவன மேலாளர் பணமோசடி விவகாரத்தில் தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக மாதாவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் காத்திருப் போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன் திடீரென விடுப்பு எடுத்துள்ளார். இந்த நிலையில் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் டிசி பாண்டியராஜன் கொண்டு வரப்பட்டுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாண்டிய ராஜனிடம் தீவிர விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. 2 0 1 7 ஆ ம் ஆண்டு திருப்பூர் அருகே மதுக் கடைகளை அகற்ற போராடிய பெண்கள் மீது தாக்குதல் நடத்தியவர் பாண்டிய ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.






