சீறிபாய்ந்து பரிசுகளை தட்டிச்சென்ற காளை
தூத்துக்குடி,ஜூலை 5-
தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டி அருகேயுள்ள கிழவி பட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன்,மலையடிகருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழா வினை முன்னிட்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டு இருந்தது. சின்ன மாடு, பூஞ்சிட்டு,தேன் சிட்டு என 3 பிரிவுகளில் போட்டிகள் நடை பெற்றது. சின்னமாட்டு வண்டிக்கு 6மைல் தூரமும் , பூஞ்சிட்டு மாட்டு வண்டிக்கு 5 மைல் தூரமும், தேன் சிட்டு மாட்டு வண்டிக்கு 4 மையில் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டது 3 பிரிவாக நடைபெற்ற போட்டி களில் 53 ஜோடிமாடுகள் பங்கேற்றன..முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியை திமுகமாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரமேஷ் துவக்கி வைத்தார் தேன் சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தை அமமுக கோவில்பட்டி நகரதுணை செயலாளர் சிவக்குமார் பாண்டியன் துவக்கி வைத்தார் சீறிபாய்ந்து சென்ற காளைகளை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கைதட்டி உற்சாகபடுத்தினர் இப் போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பெற்ற மாட்டு வண்டிகளும், சாரதிகளுக்கும் பரிசு தொகை வழங்கப்பட்ட கெளரவிக்கப்பட்டனர்.






