சிறப்பு படைகள் கலைப்பு – டி.ஜி.பி. அதிரடி உத்தரவு !

அஜித் குமார் மரண வழக்கு

சென்னை:ஜூவை 3 -சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்புவனம் போலீஸ் டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின்கீழ் செயல்பட்டு வந்த தனிப்படை போலீசாரே காவலாளி அஜித்குமாரிடம் விசார ணை மேற்கொண்டனர். அப்போது தனிப்படையில் இடம் பெற்றிருந்த 5 போலீசார் தான் காவலாளி அஜித் குமாரை பிளாஸ்டிக் பைப்பால் தாக்கி அவரை கொலை செய்திருப் பது வெளிச்சத்துக்கு வந்தது. தனிப் படை காவலர்களை பொறுத்த வரையில் அவர்கள் எப்போதுமே குற்ற வழக்குகளில் விசாரணை நடத்துவதில் கை தேர்ந்தவர் களாக இருப்பார்கள். ஏதாவது ஒரு வழி  யில் குற்றவாளியிடமிருந்து உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான வித்தையை அவர் கள் கற்று வைத்திருப்பார் கள்.சில குற்ற வழக்குகளில் உண்மையிலே யே தவறு செய் திருந்த குற்றவாளி உண்மை யை ஒத்துக்கொள்ள மறுப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் அந்த குற்றவாளி களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாத வகையில் அடித்து உண்மையை வெளிக் கொண்டு வருவது காவல் துறை யில் தொடர்ச்சியாக நடந்து கொண்டே தான் இருக்கிறது.இது போன்ற சூழலில் தான் ஒன்றும் அறியாத அப்பாவியான காவலாளி அஜித் குமாரை தனிப்படை போலீ சார் 5 பேர் சரமாரியாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து உயர்போலீஸ் அதிகாரி களின் கீழ் செயல்படும் தனிப்படை களை கலைப்பதற்கு டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவிட்டுள் ளார்.இது தொடர் பாக அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள்,மண்டலஐ.ஜி.க்கள்,போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட் டோருக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது.அதில் துணை கமிஷ னர்கள், போலீஸ் சூப்பிரண் டுகள், டிஎஸ்பிக்கள் உள்ளிட்டோரின் கீழ் செயல்படும் சிறப்பு படைகள் நிரந்தரமாக செயல்படக்கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஏதாவது குற்ற வழக்கு கள் நடை பெற்றால் அதில் துப்பு துலக்குவதற் காக மட்டுமே துணைகமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் டிஎஸ் பிக்கள் ஆகியோர் தங்களுக்கு கீழ் பணியாற்ற தனி படைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப் பட்டு ள்ளது. இந்ததனிப்படையை அமைப்பதற்கும் மண்டலஐஜிக்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்கள் ஆகியோரிடம் உரிய அனுமதி பெற வேண்டும் என்றும் டிஜிபி அறிவு றுத்தி இருக்கிறார். தமிழகம் முழு வதும் அனைத்து மாவட்டங்களி லும் போலீஸ் சூப்பி ரண்டுகள் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் மாநகர பகுதிகளில் துணை கமிஷனர்கள் உதவி கமிஷனர்கள் ஆகியோரின் கீழ் செயல்படும் ஆயிரத்துக்கும் மேற் பட்ட தனிப் படை போலீசார் உடனடியாக மாற்றுப்பணிகளில் அமர்த்தப்பட வேண்டும் என்றும் டிஜிபி அலுவல கத்திலிருந்து தெரிவிக்கப் பட்டுள் ளது. இந்த தனிப்படை போலீசாரை காவல் நிலைய பணிகள் சட்டம் – ஒழுங்கு மற்றும் குற்றப் பிரிவு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டு இருக்கி றது. தமிழக அரசின் ஆலோசனை யின் படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் இதன் மூலம் தமிழகம் முழுவதும் அனைத்து காவல் நிலையங்களி லும் தனிப் படை போலீசார் இனி விசாரணை கைதி களிடம் எல்லை மீறி நடந்து அவர் களை அடித்து துன்புறுத்து வது முற்றிலுமாக தடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி உறுதி அளித்துள்ளார்.