தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத்திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம்செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல் நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங் களிலிருந்து 11 முதல் நிலை காவ லர்கள்,என மொத்தம் 21 முதல் நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணைகளை ஜுன்.30 – அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
2025-26 ஆம் ஆண்டிற்கான காவல் துறை மானிய கோரிக்கை யில் முதலமைச் சர் அவர்கள், காவலர் கள் பதவி உயர்வில் ஏற்படும் கால தாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்ப டையில் தற்போது நடை முறையில் உள்ள காவலர்களுக் கான நிலை உயர்த்து தல் காலத்தை காவல் ஆளிநர் களை முதல்நிலை காவலர் / தலைமை காவலர்/ சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலை உயர்வு மேம்படுத்துவதற்கான கால அவகாசம் 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி 10+3+10 ஆண்டு களாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.அதன்படி, தற்போதுள்ள பதவி நிலை உயர்வு த்திட்டத்தை மாற்றி 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல் நிலைக்காவலர் களாகவும்,முதல் நிலை காவலர் பதவியிலிருந்து தலைமை காவலர் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி யுள்ள காலம் 5 ஆண்டு காலவரம் பை 3 ஆண்டுகளாகக் குறைக்கப் பட்டு,பின்னர் தலைமைக் காவலர் களாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் (மொத்தம் 23ஆண்டுகள்) தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி நிலை உயர்வு பெற வழி வகை செய்து அரசாணை வெளியி டப் பட்டுள்ளது.மேலும்,இப் புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல் படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி திருத்திய கொள்கை முடிவானது அரசாணை வெளியி டப்பட்ட 12.06.2025 நாளிலிருந்து நடை முறைப் படுத்தப்படும்.இந்த புதிய பதவி நிலை உயர்வுத்திட்டத் தின் படி 2011-ஆம் ஆண்டில் பணி யில் சேர்ந்த 8,533 காவலர்களில், 12.06.2025 அன்று 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணி நிறைவு செய்து பணியாற்று பவர்கள் 1.07.2025 முதல் உடனடி பயன டைந்து தலைமை காவலர் களாக பதவி நிலை உயர்வு பெறுவர். மேலும்,2026-ஆம் ஆண்டில், முதல் நிலை காவலர் களாக பணியாற்றும் 11,488 காவலர் கள் இப்புதிய பதவி நிலை உயர்வின் படி தலைமை காவலர் களாக பதவி நிலை உயர்வு பெற உள்ளனர். இந்த புதிய காவலர் களுக்கான நிலை உயர்த்துதல் ஆணையினை செயல் படுத்திடும் வகையில்,முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் ஒவ்வொரு காவல் சரகத்திற்குட் பட்ட மாவட்டங்களில் இருந்து11 முதல் நிலை காவலர்களுக்கு என மொத்தம் 21 முதல் நிலை காவலர் களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார் என்பது குறிப்பிடதக்கது.






