தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஜீலை 14-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்:-
திருச்சி மாவட்ட ஆட்சியர், அலுவலகம் அருகே திருச்சி மாவட்டம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட கவுரவ தலைவர் ஜெக நாதன், மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் முத்து, மாவட்ட துணை தலைவர் கள் குழந்தைவேலு ,லோகநாதன், மாவட்ட இணைகள் சண்முகம், மணிகண்டன் உள்பட200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக நியாயவிலைக் கடைகளில் தற்பொழுது புளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்த பட்சம் 8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. ஆகையால் பொது மக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர் களுக்கும் மோதல்போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது. இதனை களையும் பொருட்டு புளூடூத் முலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப் படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப் படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.






