கடலாடி கிராமத்தில் 2ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா எம்எல்ஏ சரவணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்!

சீறிப்பாய்ந்த காளைகள் இளைஞர்கள் உற்சாகம்

2025 ஜூன் 30 ;கலசபாக்கம் அடுத்த கடலாடி கீழ்தெருவில் 2ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ கொடி அசைத்து தொடங்கி வைத்தார் .

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 2 ஆம் ஆண்டு எருது விடும் திருவிழா. ஊர் பொதுமக்களும் விழா குழுவினரும் இளைஞர்களும் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பா ளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் எம்எல்ஏ பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. இதில் இளைஞர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான எருதுகள் பங்கேற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த எருதுகள் வீதியில் சீறிப் பாய்ந்து ஓடின. எருது விடும் விழாவை காண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து இளைஞர்கள் குவிந்தனர். இந்நிகழ்வில் குறைந்த நேரத்தில் ஓடி வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களிடம் முதல் பரிசு பல்சர் இருசக்கர வாகனமும் இரண்டாவது பரிசு ஹீரோ ஹோண்டா இருசக்கர வாகனமும் மூன்றாவது பரிசு எக்ஸ் எல் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் சுப்ரமணியன், மாவட்ட பிரதிநிதி கடலாடி என்.எஸ் முருகையன், முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இளையராஜா, கீழ்பாலூர் முன்னாள் கவுன்சிலர் தணிக்கமலை, சிங்காரவாடி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஆனந்தன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரவிச்சந்திரன், விவசாயி அணி நீலகண்டன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மணியழகன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் விழா குழுவினரும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கடலாடி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவில் 300-க்கும் மேற்பட்ட எருதுகளும் கடலாடி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.