மகராஷ்டத்தில் ஓர் கூமாபட்டி…! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்கு முக்காடிய மலைக்கோட்டை !

மகாராஷ்டிரத்தின் மலை உச்சியில் உள்ள கோட்டைக்கு ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத அளவில் குவிந்த சுற்றுலா பயணிகளால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திடீர், திடீரென இணையத்தில் வைரலாகும் இடங்களுக்கு உடனே சென்று அதனை “இன்ஸ்டா ரீஸ்!,” போட்டுவிட வேண்டும் என கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது அந்த வகையில் சமீபத்தில் வைரலான விருதுநகர் மாவட்டத்திற்கு அருகில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள சிறிய கிராமமான கூமாபட்டிக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது அதை இளைஞர் பட்டாளம்.

தென் மாவட்டத்தில் கூமாபட்டி தனித்தீவு ஊட்டி கொடைக்கானல் போகத் தேவயில்லை, கூமாபட்டிக்கு வாங்க என கூமாபட்டி பற்றி இன்ஸ்டா பிரபலம் ஒருவர் பதிவிட்ட ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனால், பலரும் கூமாபட்டி நோக்கி படையெடுக்க யாரும் இங்கு வர வேண்டாம் என அரசையே அலற வைத்து விட்டனர்.

அதைப்போல, மகாராஷ்டிர மாநிலத்தின் உயரமான மலை மீது அமைந்திருக்கிறது ஹரிஹர் கோட்டை. இந்தியாவிலேயே மிகவும் ஆபத்தான மலையேற்றப் பகுதியாக அறியப்படும் ஹரிஹர் கோட்டைக்கு சரியான படிகள் எல்லாம் கிடையாது.மலையிலேயே படிகள் செதுக்கப் பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் இருக்கும் வெள்ளியங்கிரியைப் போன்ற இந்த மலையேற்ற வீடியோவை, இணையதளத்தை வாசிகள் இன்ஸ்டா ரீல்ஸ்களில் வெளியிட தேனீக்கள் போல அந்த மலையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளது அந்த இளைஞர் பட்டாளம்.