வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம்!

திருச்சியில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

திருச்சியில் வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலம் தழுவிய மாவட்ட தலைநகரங்களில் பேரணி மற்றும் தர்ணாஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை மாவட்ட தலைவர் பால்பாண்டி துவக்கி வைத்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றி செல்வன் அனைவரையும் வரவேற்றார்.இந்தப் பேரணி மற்றும் தர்ணா போராட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ச. பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட தலைவர் ஜம்புநாதன் கோரிக்கை விளக்க உரையாற்றினார் இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அய்யனார்,மகேஷ், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் அந்தோணி துரை துவக்க உரையாற்றினார் இதில் மாநில முன்னாள் தலைவர் சுடலை யாண்டி சிறப்புரை ஆற்றினார். இப்பேரணி மற்றும் தர்ணா போராட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் செல்வராணி, மாநிலச் செயலாளர் செந்தமிழ்ச் செல்வன், மாவட்ட செயலாளர் நவநீதன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் பெரியசாமி மாநிலச் செயலாளர்கள் செந்தில் குமார், அல்போன்சா மாவட்ட தலைவர் பாண்டீஸ்வரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.