போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை: நாகர்கோவில் நீதி மன்றம் தீர்ப்பு

நாகர்கோவில், ஜூன். 25-  குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நீதி மன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதில் முன்னுரிமை கொடுத்து செயல் பட்டுவருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு செண்பக ராமன் புதூர் பகுதியில் 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக ஆரல்வாய்மொழி, சமத்துவபுரம்,கங்கை தெருவை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் மகேஷ் (18) மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையம் போசோ வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்டது.இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதிஇக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 25 ஆண்டு கள் சிறை தண்டனையும் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டு  கள் சிறை தண்டனை: நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு, 3000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள். நீதிமன்ற வழக்கு விசாரணை சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி களுக்கு தண்டனை வாங்கித் தரகாரணமாக இருந்தஇவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதி மன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட காவல் கண்காணிப் பாளர், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை எஸ்.பி.வெகுவாக பாராட்டினார்.