பெரியார், அண்ணா வீடியோவால் கூட்டணிக்குள் சர்ச்சை முருக பக்தர் மாநாட்டு தீர்மானத்துக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!

ஆர்.பி. உதயகுமார் வீடியோ வெளியிட்டு அதிரடி விளக்கம்!!

சென்னை, ஜூன்.25- முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ வெளியானது குறித்து முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:“முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட
அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருகபக்தர்கள் என்ற அடிப்படையிலேயே தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் முருகபக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம். பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்ட தற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அண்ணா,ஜெயலலிதாவை அவதூறாக பேசியதற்காக பழனிசாமி எடுத்த முடிவு தமிழ் நாட்டிற்கே தெரியும். மேடை நாகரீகம் கருதி அமைதியாக இருந்தோம். அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடு களையும் விட்டுக்கொடுக்காது. இது தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன் தி.மு.க.வுக் கும் நன்றாக தெரியும். ஆனால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது சாக்கு போக்கு கிடைக்காதா என்ற வகையில் தான் அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள். முருகன் பக்தர்கள்  மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற் கும் எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார். 2023-ல் பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்துக் கொண்டதை சுட்டிக்காட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் பாஜக   வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதே போல அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவர £ ன எஸ்.பி. வேலு மணியும் முருக பக்தர் மாநாட்டுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறினார். சமீபத்தில் கோவை வந்த ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு
எஸ்.பி.வேலுமணி வேல் ஒன்றை பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.