வீரவநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தனர்.
வீரவநல்லூர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பேரூராட்சியின் மன்ற உறுப்பினருமான அனந்தராமன் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.என்.நேரு தலைமை யில் நேற்று (23.06.2025) திமுகவில் சேர்ந்தார், அதைத் தொடர்ந்து வீரவநல்லூர் பேரூராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சந்தானம் அதிமுகவிலிருந்து விலகி அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுக இணைந்தார், இதில் பேரூர் கழக செயலாளர் வீ. சுப்பையா, துணைச் செயலாளர் முத்து ராமலிங்கம், கவுன்சிலர் சிதம்பரம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சுபாஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






