நெல்லை அம்பாசமுத்திரத்தில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டம்
முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் என்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நான்கு மாத கால தொடர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று 21.06.2025 சனிக்கிழமை மாலையில், அம்பாசமுத்திரம் கல்யாணி தியேட்டர் அருகில் அம்பை TNTJ சார்பில் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி தலைமையிலும் அம்பை கிளை தலைவர் அப்துல் ரகுமான் அவர்கள் முன்னிலையிலும் துவங்கிய இப் பொது கூட்டத்தில், தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம் M.I.S.C. அவர்கள் “மக்கள் மனங்களை வென்ற மாமனிதர் ” என்ற தலைப்பிலும்,TNTJ மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் பிர்தவ்ஸி அவர்கள் “நல்லதொரு குடும்பம்” என்ற தலைப்பிலும்,
மாவட்ட தலைவர் மஸ்வூத் உஸ்மானி அவர்கள் வரதட்சணை ஒழிப்பில் TNTJ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்!
மாவட்ட செயலாளர் மு.அன்சாரி, பொருளாளர் முகம்மது காசிம், துணை செயலாளர்களான சிராஜ், கோட்டூர் சாதிக், அஷ்ரப், பேட்டை சேக் ஒலி, அம்பை கிளை செயலாளர் S கோதர் ,துணைத் தலைவர் S சேக் பாபு ஆகியோர் கலந்து கொண்டு கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்கள்!!
மாவட்ட துணை செயலாளர் சாந்து உமர் தீர்மானங்களை வாசித்தார்.
மாவட்ட துணை தலைவர் ஹக் மைதீன் நன்றியுரை வழங்கினார்.
இதில் நெல்லை மாவட்டத்தில் லிருந்து பரவலாக ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அம்பையில் இரயில்வே மேம்பாலம் அம்பாசமுத்திரம் பாபநாசம் செல்லும் ரோட்டில் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் மற்றும் பள்ளி மாணவர்கள் வியாபாரிகள் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகின்றது . ஆகவே இரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்ளப்படுகின்றது.
தெரு நாய்கள் தொந்தரவு
அம்பை மற்றும் சுப்பிரமணியபுரம் பகுதிகளில் தெருநாய்கள் அதிகமாக தொந்தரவு இருப்பதால் நகராட்சி அலுவலகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க இப்போது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்திய உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் தலைமையிலான அமர்வு புதிய வக்ஃப் திருத்த விசாரணை நிறைவு செய்து தனது தீர்ப்பை தேதிக்குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைத்துள்ளது அதுவரை உச்சநீதிமன்றம் விதித்த இடைக்காலத்தடை தொடரும் எனினும், இந்திய முஸ்லீம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நீதியரசர்கள் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும் , இஸ்லாமியர்களின்
சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கைகளுக்கு செல்வதை தடுத்து நிறுத்தும் வகையில தீர்ப்பு அமைய வேண்டும் எனும் கோரிக்கையை இந்தபொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம் இட ஒதுக்கீடு கோரிக்கை,
கர்நாடக காங்கிரஸ் அரசு அரசின் ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அறிவித்து அதை நடைமுறைப்படுத்த ஆளுநர் உள்ளிட்ட ஒன்றிய அரசுடன் போராடிக்கொண்டுள்ளது வரவேற்கத்தக்க விஷயம் இதே போன்ற சமூக நீதி பார்வையை ஆளும் திமுக அரசிடம்
தமிழக முஸ்லீம்கள் எதிரிபார்க்கிறார்கள், 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்த பட்சம் 5 சதவீதமாகவாவது அதிகரிக்க வேண்டும் எனும் கோரிக்கையை பன்னெடுங்காலமாக இஸ்லாமியரகள் வைத்து வருகின்றனர், சென்ற தேர்தல் அறிக்கையிலும் , பிரச்சாரத்தின் போது முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் வாக்குறுதி கொடுத்தார், தான் சொன்ன வாக்கை காக்கும் வகையில் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 இலிருந்து 5 சதவீதமாக உயர்த்தி அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்களை இந்த பொது கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.






