சீடர் போட்டுடைத்த உண்மை..!
மதுரை, ஜூன் 20 உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நித்யானந்தாதாக்கல் செய்த மேல் முறை யீட்டு மனு விசாரணை்யின் போது மனுதாரர் எங்கு உள்ளார்? கைலாசா எங்கு உள்ளது? என நீதி பதிகள் கேள்வி எழுப்பிய நிலையில்,அது ஆஸ்திரேலியா வுக்கு அருகே உள்ளது என நீதி மன்றத் தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.நித்யானந்த திருவண்ணாமலை பீடத்தை சேர்ந்த நித்தியானந்தா என்ற ராஜசேகர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந் தார். அதில், நான் பக்தராக ஆதினம் மடத்திற்குள் நுழையதடை விதிக்க கூடாது. தனி நீதி பதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்தார். இந்தமனு நேற்று நீதிபதிகள் முரளிதரன், கிருஷ்ணவள்ளி அமர்வு முன் கடந்த பல வருடங்களுக்கு முன்விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தனி நீதிபதி விதித்த தடை உத்தரவுக்கு இடைகால விதித்து உத்தர விட்டனர் மேலும் இதுகுறித்து இந்து சமய அறநிலைய துறை,பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசார ணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர்.இந்த நிலையில் இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியம், மரியா கிளீட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மனுதாரர் எங்கு உள்ளார் கைலாசா எங்கு உள்ளது. அங்கு எப்படி செல்வது? நீங்கள் சென்று உள்ளீர்களா? பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவை உண்டா? எனபல் வேறு கேள்வி களை எழுப்பினர். இதை தொடர்ந்து, அவரது சீடர் அரச்சனா என்பவர், ஆஸ்திரேலியா அருகில் உள்ள USK என்ற தனி நாட்டில் நித்யானந்தா உள்ளார். அந்நாட்டிற்கு ஐநா சபையில் அங்கீகாரம் உள்ளது. எங்கள் சார்பில் புதிய வழக்கறிஞரை நியமிக்க அனுமதிக்க வேண்டும் எனகூறினார்.இதை தொடர்ந்து, நீதிபதிகள், வழக்கறிஞர் மாற்று வதற்கு அனுமதிவழங்கி, வழக்கு விசாரணை யை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பாலியல் பலாத்காரம், கடத்தல், மோசடி போலீசாரால் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடிகைலாசா என்ற நாட்டை உருவாக்கிய தாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதது.






