கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனை பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய் பெண்குழந்தை பலி!

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த மங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரதாப் வயது 36 தந்தை பெயர் அண்ணாதுரை இவர் அதிகப்படியான கடன் வாங்கியதால் அவரது மனைவி பிரித்திஷா வயது 23 இருவருக்கும் இருடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இன்று காலை சுமார் 8 மணி அளவில் மங்களூர் கிராமத்தில் உள்ள கிணற்றில் பிரித்திஷா அவரது குழந்தைகள் அர்த்விகா வயது 2,அதிரன்- 4 ஆகியோருடன் குதித்துள்ளார் இதை அறிந்த அவரது உறவினர்கள் உடனே சென்று காப்பாற்றி உள்ளார்கள் இதில் அர்த்விகா என்ற குழந்தை நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.இறந்தவரின் பிரேதம் மங்களூர் அரசு மருத்துவமனையில் இருந்து பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து சிறுபாக்கம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.