கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த மூக்காண்டா பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மகன் குமரேசன் என்பவரிடம் சிகரலப் பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ் என்பவர்கள் கடனாக வாங்கிய ஒரு கோடியை ரூ 3 லட்சம், மற்றும் 30 லட்சத்து 50 ஆயிரம் சீட்டு பணம் மேலும் தனியார் பைனான்ஸில் வாங்கி கொடுத்த 1லட்சத்து 75 ஆயிரம் பணத்தை கேட்டதற்கு திருப்பிக் கொடுக்காமல் கொலை மிரட்டல் விடுக்கும் சிகரள பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகு, சுரேஷ், கனகராஜ், சரசம்மா, முனிரத்தினம், சிவகுமார், கோவிந்தன் மற்றும் ரகுவின் கூட்டாளிகள் பெயர் தெரியாத இரண்டு நபர்கள் கொலை மிரட்டல் கொடுத்ததால் மன உளைச்சலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது மனைவி குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார், அப்பொழுது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக தண்ணீரை ஊற்றி முதலுதவி செய்து காப்பாற்றினார். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடன் பிரச்சினையால் தீக்குளிக்க முயன்றவரை காப்பாற்றிய போலீசார் !






