அகமதாபாத்தில்தான் இந்த அதிர்ச்சி… கருகிய உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை…
அகமதாபாத், ஜூன் 13-குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிதீப்பிடித்ததில் பயணிகள் 230 பேர்,பணியாளர்கள் 10 பேர் என விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகி உள்ளனர். தீயில் கருகிய அவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை
மேற்கொள்ளப்பட உள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு நேரடியாகச்செல்லும் ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானம் 242 பேருடன் புறப்பட்டுள்ளது. 230 பயணிகள் மற்றும் 12 ஊழியர்கள்
என மொத்தம் 242 பேர் இருந்த நிலையில், விமானம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. அந்த
விமானம் 1.10 மணிக்குக் குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்துபுறப்பட வேண்டியது. அது ஏழு நிமிடங்கள் தாமதமாக 1 . 1 7 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது.
இந்த விமானம் அடுத்த 8 நிமிடத்தில் விபத்தில் சிக்கியது.அகமதாபாத் விமான நிலையம்
அருகே பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து தீப் பிடித்து எரி ந்த து. இ ந்த
விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் என்று மொத்தம் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவரை தவிர மற்ற அனைவரும்பலியாகி உள்ளனர். இந்த விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியாகி உள்ளார். இவர் 2016 ஆகஸ்ட் 7 ம்தேதி முதல் 2017 ம் ஆண்டு டிசம்பர் 26 வரை முதல் முறையாக முதல்வராக இருந்தார். அதன்பிறகு 2017 டிசம்பர் 26ம் தேதி முதல் 2021 செப்டம்பர் 13ம் தேதி வரை 2வது முறையாக முதல்வராக இருந்தார்.
இவர் லண்டனில் உள்ள தனதுமகளை பார்க்க விமானத்தில் பயணித்தபோது விபத்தில் சிக்கி
மரணமடைந்துள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் இன்னும்தெ ரியவி ல்லை . இதுப ற் றி
தீவிரமாக வி ச ா ர ணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விமான விபத்து நடந்த இடத்தில் பயணிகளின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் கிடந்தன.அந்த உடல்களை மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர்க ளி ன் உ டல்க ள் வைக்கப்பட்டுள்ளது. உடல்கள் கருகியதால்
பயணிக ளை அ டை ய ா ள ம் காண்பதில் சிரமம் உள்ளது .இந்நிலையில் தான், பயணிகள்
மற்றும் விமான பணியாளர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற் கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அகமதாபாத் விமான நிலையத்தில் எடுக்கப்பட்டு வருகிறது இந்த டிஎன்ஏ பரிசோதனை என்பது எப்படி நடக்கும்? என்பதுபற்றிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது இறந்தவர்களின் உடலில் இருந்து டிஎன்ஏ சேகரிக்கப்படும்.அதேபோல், விமான பயணிகளின் குடும்பத்தினரிடம் டிஎன்ஏ சேகரிக்கப்படும். இந்த டிஎன்ஏக்களை ஒப்பிட்டு உடல்கள் அடையாளம் காணப்படும். பொதுவாக டிஎன்ஏ பரிசோதனை சர்ச்சைகள் ஏற்படும் போது குழந்தைகளின் பெற்றோரை (Parental testing)கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும்.
அதேபோல் குற்றவாளிகளை அடையாளம் காணவும் (Forensictesting) டிஎன்ஏ பரிசோதனை
மேற்கொள்ளப்படும். மேலும் மரபணுவை கண்டறிய (Genetherapy) அதாவது பெற்றோர்
அல்லது குழந்தையின் மரபணுநிலை மற்றும் பிறப்பு குறைபாடுகளை கண்டறிய டிஎன்ஏ
பரிசே ாதனை நடத்தப்படும்.அதேபோல் ஒருவரின் வம்சாவளி(Genetic Genealogy) குறித்து
ஆராயவும் இந்த டிஎன்ஏ பரிசோதனை என்பது மேற்கொள்ளப்படும். இதுதவிர தீவிபத்துகளில்
சிக்கி கூட்டம் கூட்டமாக மக்கள் இறக்கும்போது அவர்களை அடையாளம் காணவும் டிஎ ன் ஏ
பரிசோதனை மேற்கொள்ளப்படும்.அந்த வகையில் விமான விபத்தில் சிக்கி உடல் கருகி இறந்தவர்களின் உடல்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளஅகமதாபாத் மருத்துவமனையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இது அகமதாபாத்தில் இருந்துலண்டனுக்கு இயக்கப்படும் தினசரி விமானமாகும். ஒவ்வொரு நாளும் இந்த விமானம் மதியம் இந்திய நேரபபடி 1 . 1 0 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து கிளம்பும்.லண்டன் நேரப்படி மறுநாள் மாலை 6.25 மணிக்கு அது லண்டனில் தரையிறங்கும். மொத்தமாக விமானத்தின் பயண நேரம் 9 மணி நேரமாக இருக்கும். நேற்று அந்த விமானம் சற்று தாமத மாக 1.17 மணிக்கே குஜராத்தில் இருந்து கிளம்பியுள்ளது. இதற் கிடையே விமானங்கள் குறித்த தகவல்களை டிராக் செய்தும் பிளைட் ரேடார் 24ல் சில முக்கிய தகவல்களைப்பார்க்க முடிகிறது . அதாவது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அது விபத்தில் சிக்கியுள்ளது.விமானம் 625 அடி உயரத்தில்174 கேடிஎஸ், அதாவது 322 கிமீ வேகத்தில் செல்லும்போது விமானத்தின் சிக்னல் துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு விமானத்தில் என்ன நடந்தது என்பது குறித்த டேட்டா அந்த தளத்தில்இல்லை. அப்போது தான் விமானம் மே டே என விமான கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு கூறியிருக்கிறார். பொதுவ ா க விமானத்தில் எதாவது ஆபத்து ஏற்பட்டால் இந்த மே டே அலர்ட் கொடுப்பார்கள். விமானி மே டே அலர்ட் கொடுத்த உடனேயே திடீரென சிக்னல் துண்டிக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதைத்தொடர்ந்து விமானம் குடியிருப்பு பகுதியில் மோதியுள்ளது. இந்த விம ானத்தில் விம ான ஊழியர்களுடன் சேர்ந்து மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில்,அவர்கள் அனைவருமே விபத்தில் இறந்ததாக அறிவிக்கப் பட்டுள்ளது.எனவே, விமானம் 625 அடி உயரத்தில் பறக்க தொடங்கிய போதே, அது கட்டுப்பாட்டை
இழந்திருக்கும் என தெரிகிறது.உடனடியாக அதன் உயரம் குறையதொடங்கிய நிலையில் , ஒருகட்டத்தில் அது மக்கள் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் விழுந்து நொறுங்கியது தெரிய வந்துள்ளது.விபத்து தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் விமானம் அப்படியே கீழ் நோக்கிப் பறப்பதும், அது விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மிகப் பெரிய தீப்பிழம்பு வருவதும் தெளிவாகத் தெரிகிறது. விமானத்தின் கறுப்பு பெட்டியை மீட்டு ஆய்வு செய்தால் மட்டுமே விபத்திற்கான காரணம் தெளிவாகத் தெரிய வரும்.






