புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று மதுரை ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பாக மதுரை தல்லாகுளம் பகுதியில் மகளிர் நடத்திய மது மற்றும் போதை ஒழிப்பு பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டனர்
இந்த பேரணியை கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் செல்லப்பண்டியன், வழக்கறிஞர் அணியின் துணைச்செயலாளர் அ.ச.அன்பழகன் மற்றும் மாநில துணைப் பொதுச்செயலாளர் கனியமுதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்
இந்த பேரணியில் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப் பாண்டியன், தெற்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப.ரவிக்குமார், மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர் தீபம் என்ற சுடர் மொழி மற்றும் 500க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கருப்பு நிற உடை அணிந்து கலந்து கொண்டனர் இந்த பேரணி ஆனது மதுரை தல்லாகுளம் பகுதியில் இருந்து அவுட் போஸ்ட் புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவ சிலை அமைந்துள்ள பகுதி வரை பேரணியாக நடந்து வந்தனர்
பின்பு அங்கே அமைந்துள்ள புரட்சியாளரின் திருவருவ
சிலைக்கு மாவட்டம் மற்றும் மாநில நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்






