5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கிறார்கள். உலகத்திலேயே பெரிய கால்பந்து மைதானம், உலகத்திலேயே பெரிய கிரிக்கெட் மைதானம்.?
இந்த 60 ஆண்டுகளிலே ஒரு ஏரியை வெட்டிய ஏதாவது ஒரு வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறதா.? – காவேரி வைகை கிருதம்மாள் நதி குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் தமிழக அரசிற்கு கேள்வி.
கங்கைகொண்ட சோழபுரம் ஏரியை தூர்வார வக்கற்ற திராணியற்ற ஆட்சி தான் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறது. 60 ஆண்டுகள் நீர்நிலைகள் கேட்க நாதியற்ற துறையாக நீர்வளத்துறை காதிலே விழுந்தாலும் கேட்காத ஒரு துறையாக நீர்வளத்துறை என விவசாயிகள் குற்றச்சாட்டு.
காவேரி வைகை கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மாநில பயிற்சி முகாம் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பத்திரிகையாளர்கள் சங்கம் அரங்கில் அதன் மாநிலத் தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது இதில் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் இந்த மாநில பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர் இதில் முக்கியமான 5வதுஅம்ச கோரிக்கைகளை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இந்த பயிற்சி முகாமில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அதன் மாநில பொதுச் செயலாளர் அர்ச்சுணன் செய்தியாளர்கள் கூறும்போது.,
காவிரி வைகை கிருதம்மாள் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பாக பயிற்சி முகாம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி காவிரி வைகை கிருதம்மால்நதி குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த ஆட்சி முடிந்து இந்த ஆட்சி வந்து 4 வது ஆண்டு வரப்போகிறது. எனவே, இந்த ஏழு மாவட்ட விவசாயிகள் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் மூன்று லட்சம் ஏக்கர் பாசன வசதி பெரும் இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கி நிறைவேற்ற வேண்டும். மூன்று கட்டங்களில் இந்தப் பணியை நிறைவேற்ற வேண்டும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழகம் முழுவதும் ஆறுகள், குளங்கள், ஏரிகள், 60 ஆண்டுகள் தூர்வாரப்படாமல் நீர் நிலைகள் பாதுகாக்கப்படாமல் அனைத்து அணைகளும் தூர்வாரப்படாத அவல நிலை இருந்து கொண்டு இருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய அணைகள் தூர்வாரப்படாத ஒரு அவலமான நிலைமை இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்கிறார்கள். உலகத்திலேயே பெரிய கால்பந்து மைதானம், உலகத்திலேயே பெரிய கிரிக்கெட் மைதானம் ஆனால், ஆயிரம் ஏக்கரில் இந்த 60 ஆண்டுகளிலே ஒரு ஏரியை வெட்டிய ஏதாவது ஒரு வரலாறு தமிழ்நாட்டில் இருக்கிறதா.?
கங்கைகொண்ட சோழபுரம் ஏரியை தூர்வார வக்கற்ற திராணியற்ற ஆட்சி தான் 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறது. 60 ஆண்டுகள் நீர்நிலைகள் கேட்க நாதியற்ற துறையாக நீர்வளத்துறை காதிலே விழுந்தாலும் கேட்காத ஒரு துறையாக நீர்வளத்துறை 2025-26 ஆம் ஆண்டில் ஆறுகள் ஏரிகள் குளங்கள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்து இரண்டு ஆண்டுகள் முழுவதும் தமிழக அரசாங்கத்தை வலியுறுத்து உள்ளோம். என்ற அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் நடந்து கொண்டிருக்கிறது தமிழக அரசாங்கம் ஒரு லட்சம் கோடி நீர்நிலைகளை பாதுகாக்க நிதி ஒதுக்க வேண்டும் 100 கோடி 200 கோடி போன்ற பிச்சை காசுகள் விவசாயிகளுக்கு தேவையில்லை யானை பொருக்கி சோளப்பொறி போட வேண்டிய அவசியம் இல்லை ஒரு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும். எங்களுடைய கோரிக்கை 200 டிஎம்சி தண்ணீரை கொள்ளளவு கொண்ட ஏரிகளை தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்க வேண்டும். தெலுங்கானாவில் நான்கே ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி ஒதுக்கி 1852 கிலோமீட்டர் கால்வாயை வெட்டி 203 கிலோமீட்டர் குகைகளை உருவாக்கி 20 புதிய ஏரிகளை உருவாக்கி 240 TMC தண்ணீரை கொண்டு வந்திருக்கிறார்கள். இவ்வளவு பெரிய மாநிலம் இதை தமிழக அரசு செய்ய முடியாதா.?
புதிய இலக்கு புதிய வியூகம் ஆறுகள் நீர்நிலைகளை பாதுகாக்க மதுவிலக்கு வன்கொடுமை தடுப்பிற்கு தனி பிரிவுகள் இருப்பது போல ஆறுகள் ஏரிகளுக்கு கண்காணிப்பிற்கு தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்ற முறையில் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறோம்.
மதுரை மாநகரில் இருக்கும் கிருதுமால் நதியையும் விருதுநகர் பகுதியில் இருக்கின்ற கௌசி மகா நதியும் பாதுகாக்க இயக்கத்தை துவங்கி விட்டோம் அரசு தூங்கிக் கொண்டிருக்காமல் அரசு நீண்ட நிலை பாதுகாக்க வேண்டும் வைகை அணையை 1959க்கு பிறகு தூர்வரப்படவில்லை பாதுகாக்க இந்த இயக்கம் இரண்டு ஆண்டுகள் தீவிரமாக இயங்கி போராட இருக்கிறோம் என தெரிவித்தார்.






