மின்வாரிய அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மின்வாரிய அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நெல்லை, டிசம்பர் -7; நெல்லை மின்வாரியம் தலைமை பொறியாளர் அலுவலகத்தில் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி மகாராஜா நகர் மின்வாரிய அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் படத்திற்கு மேற்பார்வை பொறியாளர் (உற்பத்தி) மாரியப்பன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தேவேந்திரன், மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன், மின்வாரிய திட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, திட்ட பொருளாளர் சிவபெருமாள், பொறுப்பாளர்கள் தெய்வக்குமார்,நெல்சன், சுந்தரராஜன், குமார், இசக்கி, ரகுபதி, தாழையூத்து உதவி பொறியாளர் முருகேசன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மின்வாரிய அம்பேத்கர் எம்ப்ளாயூஸ் யூனியன் மாநில துணை பொது செயலாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.