பேரழிவில் சிக்கியுள்ள தமிழகத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி உத்தரவு!

சென்னை, டிச.,04:ஃபெஞ்­சல் புய­லால் தமி­ழ­கத்­தில்ஏற்­பட்­டுள்ள
வெள்ள பாதிப்­பு­க­ளுக்­கான நிவா­ர­ணப் பணி­க­ளில் ஈடு­ப­டு­மாறு காங்­கி­ரஸ் தொண்­டர்­க­ளுக்கு அக்­கட்­சி­யின் தலைவர்­களில்ஒரு­வ­ரும்மக்­களவை எதிர்க்­கட்­சித் தலைவ­ரு­மான ராகுல் காந்தி உத்­த­ர­விட்­டுள்­ளார்.இது குறித்து அவர் வெளி­யிட்­டுள்ள எக்ஸ் தள பதி­வில், “தமி­ழ­கத்­தில் ஃபெஞ்­சல் புயல் குறித்த செய்­தி­கள் வருத்­தம­ளிக்­கின்­றன. இந்த துய­ரத்­தில்தங்­களது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை இழந்து வாடும் மக்­க­ளுக்கு என்­னு­டைய ஆழ்ந்த அனு­தா­பங்கள். தங்­க­ளு­டைய உடைமை ­க­ளை­யும் வீடு­க­ளை­யும் இழந்து நிற்
கும் மக்­க­ளுக்­கா­க­வும் பிரார்த்­திக்­கி­றேன். மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்சி
தொண்­டர்­கள் முன்­வந்து நிவா­ர­ணப் பணி­க­ளில்அர­சுக்கு உத­வு­வு­மாறு வலி­யு­றுத்­து­கி­றேன்”
என்று ராகுல் தெரி­வித்­துள்­ளார்.
வங்­கக் கட­லில் உரு­வான காற்­ற­ழுத்­தத் தாழ்வு மண்­ட­லம் படிப்­ப­டி­யாக வலுப்­பெற்று, நவம்­பர் 29ல் ஃபெஞ்­சல் புய­லாக மாறி­யது. இது புதுச்­சேரி -மாமல்­ல­பு­ரம் இடையே
கரையைக் கடக்­கும் என்­றும்
திரு­வள்­ளூர்,சென்னை, செங்­கல்­பட்டு,காஞ்­சி­பு­ரம்ஆகிய மாவட்டங்­கள் பாதிப்பை சந்­திக்­கும் என்­றும் ஆரம்­பத்­தில் கணிக்­கப்­பட்­டது.
எனி­னும், இந்த மாவட்­டங்­களில் சில பகு­தி­கள் மட்டுமே மழை வெள்­ளப்பாதிப்­பில் சிக்­கின.ஆனால் திசை மாறி­ய­தால், விழுப்­பு­ரம் மாவட்டம்மரக்­கா­ணம் – புதுச்­சேரி
இடையே புயல் கரையைக் கடந்­தது.
பின்­னர் வலு­வி­ழந்த குறைந்த
காற்­ற­ழுத்த தாழ்வு பகு­தி­யாக மாறி
விழுப்­பு­ரம், திரு­வண்­ணாமலை, கிருஷ்­ண­கிரி, தரு­ம­புரி உள்­ளிட்ட பகு­தி­க­ளுக்கு சென்­ற­தால் அங்கு
வர­லாறு காணாத மழைப்பொழிவு ஏற்­பட்­டது. திரு­வண்­ணா­ம­லை­யில் கன­ம­ழை­யின் கார­ண­மாக பாறை உருண்டு வந்துவீட்டின் மேல் விழுந்­த­தில் ஏழு பேர் மண்­ணுக்­குள்
புதைந்து உயி­ரி­ழந்த சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.