ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட அனுமந்தபுரம் தரப்பு சித்தலிங்கன் கொட்டாய் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இங்கு உள்ள பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒரு பக்கம் இன்று(03/12/2024 ) நேற்று பெய்த கனமழையால் சுற்று சுவர் இடிந்து விழுந்ததால் பள்ளி மாணவர்கள் பதற்றம் .
இந்த நிலையில் பள்ளிக்கூடத்தில் மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அதிர்ச்சி உயிர் தப்பினார்கள் . அதிரஷ்டவசமாக யாருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடி சுற்று சுவர் அமைத்து தர வேண்டும் என்று ஊர் பொதுமக்கள் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளார் . அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உயிர் தப்பினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது…






