திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

திருச்சி ஸ்ரீரங்கம் காந்தி நகரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம்
நடைபெற்றது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் காந்திநகர் எஸ் வி சாரி தெருவில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது சோழவள நாட்டின் காவேரி நதியும் கொள்ளிடம் பாயும் நடுவில் பூலோக வைகுண்டம் ஸ்ரீ ரங்கநாயகி சமேத ஸ்ரீ ரங்கநாதர் அமைந்து அருள் பாலிக்கும் ஸ்ரீரங்கம் நகரில் காந்திநகர் எஸ் வி சாரி தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ,ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ மஹா விஷ்ணு,ஸ்ரீ துர்க்கை, நவகிரகங்கள் ஸ்ரீ நாக கன்னிகள் மற்றும் சப்பானி கருப்பு ஆகிய பரிவார தெய்வங்களுக்கு ஆலய கோபுரங்கள் புதுப்பித்து வர்ணங்கள் தீட்டப்பட்டு மகா கும்பாபிஷேகம் குரோதி ஆண்டு கார்த்திகை மாதம் 5ம் நாள் புதன்கிழமை சித்தயோகம் கூடிய சுப தினத்தில் காலை 9 மணிக்கு மேல் 10. 30க்குள் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு விமானம் மற்றும் மூலஸ்தான தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை ஸ்ரீ கார்த்திகேய சிவச்சாரியார் நடத்தி வைத்தார் இதில் ஸ்தபதி அரங்கன் பொருள் மன்னார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மேலும் கும்பாபிஷேக விழாவிற்கு அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் அன்னதானமும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விநாயகர் ஆலயமாக கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்த கோடிகளும் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.