ஒரு நாள்.. ஒரு சாலை எனும் தலைப்பில் போக்குவரத்து காவல்துறை விழிப்புணர்வு!

 

மதுரை தெற்குவாசல் பகுதியில்
ஒரு நாள்.. ஒரு சாலை எனும் தலைப்பில் போக்குவரத்து காவல் துறை துணை ஆணையாளர் வனிதா அவர்களின் ஆலோசனையின் போரில்
மதுரை தெற்குவாசல், பெரியார் பஸ்டாண், கிரைம் பிராஞ்ச் ஆகிய இடங்களில்”ஒரு நாள் ஒரு சாலை” எனும் தலைப்பில்

தினசரி ஒரு சாலையை மேற்கொண்டு… அந்த சாலையில்.. நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல்,வாகனம் நிறுத்தங்களை ஒழுங்குமுறை படுத்துதல், பாதசாரிகள் சுலபமாக செல்வதற்கு வழி வகை செய்தல், சீரான போக்குவரத்து க்கு வழி வகை செய்யவும் விபத்தில்லாமல் வாகனம் ஒட்டவும் முக்கியமாக ஹெல்மட் அனிவதும், சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு விதிமுறைகளை பின் பற்றாதவாகன ஓட்டுனர் உரிமம் 3.மாதம் ரத்து செய்யப்படும் என்ற வாசக அடங்கிய துண்டு பிரசுரத்தையும் விழிப்புணர்வையும் சாலைகளை ஆய்வு செய்தனர்
பின்னர் பொதுமக்களுக்கும்
வாகன ஒட்டுனர்கள் களுக்கும் துண்டு பிரசுரத்தை விழிப்புணர்வை தெற்குவாசல் போக்குவரத்து ஆய்வாளர் நந்தகுமார் வழங்கினார் மற்றும் நிகழ்வில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்கள் பரசுராம், வெங்கடேசன்,பாண்டி, காவலர் சசி, அருண் ஆகியோர் கலந்துகொண்டனர்