ராமநாதபுரம், நெல்லையில் தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது!

ராநாதபுரம்: கனமழை தொடர்ந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருக்கின்றனர்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் 44 செ.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. வழக்கமாக 20 செ.மீ மழை பெய்தால் அதை ரெட் அலர்ட் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் ராமேஸ்வரத்தில் மிக மிக அதிகனமழை பெய்திருக்கிறது. இன்று காலையும் மழை நீடித்து வருகிறது. எனவே பள்ளிகளுக்கு விடுமுறையை மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்திருக்கிறார்.

அதேபோல நெல்லையிலும் கனமழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கான விடுமுறை குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டிருக்கிறது.