வள்ளியூர் பணிமனை மேலாளர் வினோஜ் மீது புரட்சி பாரதம் கட்சி சார்பில் மனு!

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வள்ளியூர் பணிமனையில் இருந்து வெளியூர்களுக்கு பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர் மீண்டும் அதே வழித்தடங்களில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க கோரியும் வள்ளியூர் பணிமனை மேலாளர் வினோஜ் பட்டியல் சமூக தொழிலாளிகளிடம் சாதி ரீதியாக செயல்படுவதை தடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.கே. நெல்சன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.