‘நரேந்திர மோடி பெரும் பணக்காரர்களின் கைப்பாவை’ – ராகுல் காந்தி

ஹார்மா (ஜார்க்­கண்ட்), நவ.16: பெரும்பணக்­கா­ரர்­களின் கைப்­பாவை­யாக வும், அவர்­கள் சொல்­வதை செய்­யக்­கூ­டி­ய­வராக­வும் பிர­த­மர் நரேந்­திரமோடி இருப்­ப­தாக ராகுல்காந்தி குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.ஜார்க்­கண்ட்­டின் மெஹார்­மாவில் நடைபெற்ற தேர்­தல்பிரச்­சார பொதுக்­கூட்­டத்­தில் உரையாற்­றிய காங்­கி­ரஸ் மூத்த தலைவ­ரும் மக்­களவை எதிர்க்­கட்­சித்தலைவ­ரு­மான ராகுல்காந்தி,காங்­கி­ர­சுக்­கும்  பாஜகவுக்­கும் இடையே சித்­தாந்­தப் போர் உள்­ளது.காங்­கி­ரஸ் கட்­சி­யும், இண்­டியா கூட்ட­ணி­யும் அர­சி­ய­லமைப்பை காப்­பாற்ற பாடு­ப­டு­கின்­றன. ஆனால்,அம்­பேத்­க­ரின் அர­சி­ய­லமைப்பை அழிக்க பாஜகவும், ஆர்­எஸ்­எஸ் அமைப்­பும் முயல்­கின்­றன. நான் காட்­டும் அர­சி­ய­லமைப்பு புத்­தக அட்­டையின் நிறத்தை குறை­கூ­று­கி­றார்­கள். இந்தப் புத்­தகத்­தின் நிறம் முக்­கி­ய­மல்ல, அதில் என்ன எழு­தப்­பட்­டுள்­ளது என்­ப­து­தான் முக்­கி­யம். அர­சி­யல் சாச­னத்தை படித்­தி­ருந்தால் அவர்­கள் மக்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை பரப்­பி­யி­ருக்கமாட்­டார்­கள்.எல்லோ­ரையும் ஒரு­வரோடு ஒரு­வர் சண்­டை­யி­டச்செய்­தி­ருக்கமாட்­டார்­கள்.நமது அர­சி­ய­லமைப்பு வெற்று புத்­தகம் அல்ல.அதில்,இந்­தி­யா­வின் ஆன்மா உள்­ளது.நாட்­டின் வர­லாறு உள்­ளது. அது தலித்­து­களை மதிக்­கி­றது.பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­களின் பங்­கேற்பு அதில்உள்ளது. விவ­சா­யி­கள் மற்­றும் தொழி­லாளர்­க­ளின் கன­வு­கள் அதில் உள்­ளன. எனி­னும், பாஜகவை­யும் ஆர்­எஸ்­எஸ் அமைப்­பை­யும் சேர்ந்­தவர்­கள் அதனை அழிக்க விரும்­பு­கி­றார்­கள். ஆனால், உல­கில் எந்த சக்­தி­யா­லும் அதை அழிக்கமுடி­யாது.அம்­பேத்­கர், பிர்சா முண்டா, புத்­தர், காந்தி,பூலே ஆகி­யோ­ரின் சிந்­தனைகளை நமது அர­சி­ய­லமைப்பு பிர­தி­பலிக்­கி­றது.நீர்,காடு,நிலம் ஆகி­ய­வற்றில் இன்று உங்­களுக்கு உள்ளஉரி­மைகள் அர­சி­ய­லமைப்­புச்சட்­டத்­தில் இருந்து வந்­தவை.நரேந்­திர மோடி பெரும் பணக்­கா­ரர்­க­ளின் கைப்­பாவை.அவர்­கள் சொல்­வ­தையே நரேந்­திர மோடி செய்­கி­றார். ஏழைக­ளின்பணத்­தைப் பறித்து,பெரும் பணக்­கா­ரர்­க­ளின்ரூ. 16 லட்­சம் கோடியை மோடி தள்­ளு­படி செய்­துள்ளார்.ஜார்க்­கண்­டில், பாஜக பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்­கான இட­ஒ­துக்­கீட்டை 27% லிருந்து 14%ஆக குறைத்­தது. ஒரு­பு­றம், நரேந்­திர மோடி, நான் பிற்ப­டுத்­தப்­பட்ட வகுப்­பைச்சேர்ந்­தவன் என கூறு­கி­றார். மறு­பு­றம், அவர்­கள் பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ரின் இட ஒதுக்­கீட்­டைக்குறைக்­கி­றார்­கள், உங்­கள் நிலத்­தைப்பறிக்­கி­றார்­கள்,பண­ம­திப்­பி­ழப்பு மூலம் உங்­களை வேலையில்­லா­மல் ஆக்­கு­கி­றார்­கள். ஜார்­கண்­டில் இண்­டியா கூட்­டணி மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தால் எஸ்டிஇட ஒதுக்­கீடு 28% ஆகஇருக்­கும், SC இடஒதுக்­கீடு 12% ஆக இருக்­கும்,OBCஇட ஒதுக்­கீடு 27%ஆக இருக்­கும்.பெண்­க ­ளு க்­கான கவு­ர­வத்தொகை ­ய ாகம ாதம் த ோ ­று ம்ரூ.2,500 வழங்­கப்­ப­டும். காஸ்சிலிண்­டர் விலைரூ.450 என நிர்­ணயம் செய்­யப்­ப­டும். 10 லட்­சம் வேலை வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­ப­டும். ரூ.15 லட்­சம் வரை மருத்­து­வக் காப்­பீடு வழங்­கப்­ப­டும்.அனைத்து தொகு­தி­க­ளி­லும் கல்­லூ­ரி­கள் கட்­டப்­ப­டும்.அனைத்து மாவட்ட தலைந­க­ரங்­க­ளி­லும் பொறி­யி­யல்­ ம­ருத்­து­வக் கல்­லூ­ரி­கள் மற்­றும் பல்­கலைக்­கழ­கங்­கள் அமைக்­கப்­ப­டும். நெல்­லுக்­கான குறைந்­தபட்ச ஆத­ரவு விலை ரூ. 3,200ஆக உயர்த்­தப்­ப­டும்.மற்ற விவ­சா­யப் பொருட்­க­ளின் குறைந்­தபட்ச ஆத­ரவுவிலை­யில் 50% அதி­க­ரிக்­கப்­ப­டும்” என தெரி­வித்தார்.