அரியலூரில் ரூ.101 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்

அரி­ய­லூர், நவ.16: அரி­ய­லூ­ரில் ரூ.101 கோடிமதிப்­பில் ஒருங்­கி­ணைந்த நீதி­மன்­றம் கட்­டப்­ப­டும் என தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் கூறி­யுள்­ளார்.அரி­ய­லூர் அடுத்த கொல்­லா­பு­ரம் கிரா­மத்தில் நடைபெற்ற அரசுவிழா­வில் அரி­ய­லூர்,பெரம்­ப­லூர் மாவட்­டங்­க­ளில் ரூ.120 கோடிமதிப்­பில் 53 புதிய திட்­டப்­ப­ணி­க­ளுக்கு அடிக்­கல் நாட்­டி­யும், ரூ.89.94 கோடி மதிப்­பில் 507 முடி­வுற்ற பணி­களை தொடங்கி வைத்து, 21,862 பய­னா­ளிக்கு ரூ.173.96 கோடி மதிப்­பில் நலத்­திட்ட உத­வி­களை வழங்­கி­னார். தொடர்ந்து, முதல்­வர் மு.க.ஸ்டாலின்பேசி­ய­தாது: அரி­ய­லூர் மாவட்­டம் கடலாக இருந்து நில பரப்­பாக மாறி­யது. அத­னால் தான் இப்­ப­கு­தி­யில் டைனோ­சர் முட்­டை கள் கிடைத்­துள்­ளன.அரி­ய­லூர் வளர்ச்சிஅடைய வேண்­டும் என்றே பல்­வேறு பணி­கள் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல்,பெரம்­ப­லூர் மாவட்­டத்­தை­யும் வளர்ச்­சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல்­வேறு வளர்ச்­சித்­திட்ட பணி­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளது. 2021-மே 7ம் தேதி நான் பதவி ஏற்று முதல்கையெ­ழுத்து, மக­ளி­ருக்­கான கட்­ட­ணமில்லா பேருந்து பய­ணம். இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது முதல் தற்போது வரை575 கோடி முறை மக­ளிர் பய­ணம் செய்­துள்ள­னர். 3 ஆண்­டு­க­ளுக்கு முன்பு பண்­டிகை காலங்­க­ளில் மக்­கள் ஊருக்கு செல்ல போதிய பேருந்து வசதி இல்­லா­மல் தவிர்த்­த­னர்.ஆனால், நிக­ழாண்டு தீபாவளி தினத்­தன்று கடைசி பயணி ஊருக்கு சென்ற பிறகு தான் நான் ஊருக்கு செல்­வேன் என சென்­னை­யில் நின்­ற­வர் அமைச்­சர் எஸ்.எஸ்.சிவ­சங்­கர்.பண்­டிகை காலங்­க­ளில் பேருந்­து­கள் சிறப்­பாக, மக்­கள் எளி­மை­யாக சென்று வரும்வகை­யில், போக்­கு­வ­ரத்து ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.அரி­ய­லூர், பெரம்­ப­லூர் மாவட்­டத்­துக்கு ஏராள­மான திட்­டங்­களை கொண்டு வந்­தவர் கரு­ணா­நிதி. அரி­ய­லூர் மாவட்­டத்தை உரு­வாக்­கி­ய­வ­ரும் கரு­ணாநிதி தான். ராஜேந்­திர சோழ­னுக்கு ஆடி­ தி­ரு­வா­திரை நிகழ்ச்­சியை நடத்­து­வதுநாம் தான்.ஜெயங்கொண்­டம் அரசு மருத்­து­வ­மனை தலைமை மருத்­து­வ­ம­னை­யாக ரூ.29 கோடிமதிப்­பில் பணி­கள் நடைபெற்­றுள்­ளது.நிலக்­கரி அனல்­மின் திட்­டத்­துக்கு கையப்­ப­டுத்­தப்­பட்ட நிலங்­கள் அனைத்­தும், நிலத்துக்கு வழங்­கப்­பட்ட தொகையை திரும்பபெறா­மல் விவ­சா­யி­க­ளுக்கு நிலங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. வழங்­கப்­பட்டு வரு­கின்றன. பெரம்­ப­லூர் மாவட்த்­தில் 243 ஏக்­கர்பரப்­ப­ள­வில் சிப்­காட் பூங்கா அமைக்­கப்­பட்டு 30ஆயி­ரம் பேருக்கு வேலை வாய்ப்புதரப்­பட்­டுள்­ளது. குன்­னம் பகு­திக்கு கொள்ளி­டம் குடி­நீர் வழங்க நிதி ஒதுக்­கப்­பட்­டுள்ளது. 411 ஏக்­கர் பரப்­ப­ள­வில் காரை பகு­தி­யில் அருங்­காட்­சி­ய­கம் அமைக்­கப்­படஉள்­ளது.அமைச்­சர் சிவ­சங்­க­ரின் கோரிக்­கையை ஏற்று நதி­ய­னூர், ஜெயங்கொண்­டம், வெற்­றி­யூர் குடி­நீர் திட்­டம், அரி­ய­லூர், பெரம்­ப­லூர்மாவட்­டத்­தில் உள்ள கிரா­மங்­க­ளுக்கு புதிய கொள்­ளி­டம் கூட்டு குடி­நீர் திட்­டம் கொண்­டு ­வ­ரப்­ப­டும். வார­ணவாசி கிரா­ம­த்­தில் மரு­தை­யாற்­றின் குறுக்கே தடுப்­பணை, வாடகைகட்­டி­டத்­தில் இயங்­கும் துணை சுகாதார கட்டி­டங்­க­ளுக்கு அரசு சார்­பில் சொந்த கட்­டி­டங்­கள் கட்­டப்­ப­டும். கால்­நடை மருத்­து­வம­னைகள் கூடு­தலாக கட்­டப்­ப­டும். ரூ.24கோடி செல­வில் பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில்மரு­தை­யாற்­றில் உயர்­மட்­ட­பாலம், வெங்­காய பாது­காப்­புக் கூடம், பெரம்­ப­லூ­ரில்ரூ.56 கோடி மதிப்­பில் புதிய வகுப்­பறை,விடுதி கட்­டி­டங்­கள் கட்­டப்­ப­டும். அரி­ய­லூ­ரில் ஒரே இடத்­தில் ரூ.101 கோடி செல­வில்ஒருங்­கி­ணைந்த நீதி­மன்­றம் கட்­டப்­ப­டும்.அப்போது ஒரு சிலர் எதை­யும் கண்டுகொள்­ளா­மல் இருந்­தார்­கள். நான் அப்­படிஇல்லை. சொன்ன திட்­டங்­களை செயல்­ப­டுத்­து­வேன். என்னை தேடி மக்­கள் வரு­கின்­ற­னர். மக்­களின் நம்­பிக்­கையை காப்­பாற்­று­வேன். தமி­ழக மக்­கள் என் மீதும், திமுக மீதும் வைத்துள்ள நம்­பிக்கை வீணாகாது. இது எடப்­பாடி பழ­னி­சா­மியை கலங்க வைத்­துள்­ளது. இதனால்அவர் பொய் மூட்­டை களை அவிழ்த்துவிடு­கி­றார். ஜெய­ல­லிதா கொண்டு வந்ததிட்டங்­களை அவ­ரது 4 ஆண்டு கால ஆட்சிகாலத்­தில் செய்து முடித்­து­விட்டு பெருமைபடு­கி­றார். பொய்க்கு மேக்­கப் போட்­டால் அது நிஜமாகாது.எடப்­பாடி பழ­னி­சாமிநடத்­திய    முதலீட்­டாளர்­கள் மாநாட்­டில் எவ்­வ­ளவு முதலீடு வந்­தது என சொல்­ல­மு­டி­யுமா?கமி­ஷ­னுக்கு பயந்து முத­லீட்­டாளர்­கள் ஓடி­னர்.நான் முதல்­வ­ராக பத­வி­யேற்­றப்­பின்­னர் மீண்­டும் தொழில் முத­லீட்­டாளர்­களை அழைத்­தேன். இப்போது, பல­ரும் முத­லீடு செய்ய வந்­துள்­ள­னர். எடப்­பாடி பழ­னி­சாமி ஆட்சி எப்­படா முடி­யும் என மக்­கள் எதிர்­பாா்த்து இருந்­த­னர்.மேற்கு மண்­ட­லம், தெற்கு மண்­ட­லம்,மத்­திய மண்­ட­லம் என சுற்றி வரு­கி­றேன்.வளர்ச்­சியை உறுதி செய்­யவேகள் ஆய்வுசெய்து வரு­கி­றேன். விரு­து­ந­கர் காப்­ப­கத்­தில் குழந்­தைகளை சந்­தித்­தேன். அங்­கி­ருந்த குழந்­தை கள் என்னை அப்பா என அழைத்தது மனதை நெகிழ வைத்­தது. விடி­யல் பய­ணம், மக்­களை தேடி மருத்­து­வம், காலை உண­வுத்­திட்­டம் என பல்­வேறு திட்­டங்­க­ளு­டன் தற்போது ஊட்­டச்­சத்து உறு­தித்­திட்­டத்தை 2ம் கட்­ட­மாக தொடங்­கி ­வைத்­துள்­ளேன். இத­னால் 7 லட்­சம் குழந்­தைகள் இயல்பு நிலைக்கு திரும்­பி­யுள்­ள­னர். அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் அத்­திட்­டம் தொடங்கிவைக்­கப்­பட்­டுள்­ளது. நலிந்த மக்­க­ளுக்­கான ஆட்சி இந்த ஆட்சி. குழந்­தைகள் தங்­களுக்கு தேவை­யா­னதை கேட்க முடி­யாது.அதனைச் செய்­யவே இந்த அரசு செயல்­பட்டு வரு­கி­றது. இந்த குழந்­தைகள் நாளைவளர்ச்சி அடைந்த பிறகு, எனது திட்­டங்­கள் குறித்து பேசு­வார்­கள். எனது குடும்­பம் முன்னேற ஸ்டாலின் ஒரு கார­ணம் என குழந்­தைகள் நாளை சொல்­வார்­கள். இவ்­வாறு முதல்­வர் பேசி­னார்.முன்­னதாக அரி­ய­லூர் மாவட்­டம் ஜெயங் கொண்­டம் நக­ரில் மறைந்த முன்­னாள் முதல்­வர் மு.கரு­ணா­நி­தி­யின் முழு­வு­ருவ சிலையை திறந்து வைத்­தார். தொடர்ந்து, ஜெயங்­கொண்­டம் அடுத்த மகி­மை­ பு­ரம் கிராத்­தில் டீன்­ஷூஸ் நிறு­வ­னத்­துக்கு இடம் ஒதுக்­கீடுசெய்­யப்­பட்டு ரூ.1,000 கோடி முத­லீட்­டில்,15,000 நபர்­க­ளுக்கு வேலைவாய்ப்பு அளிக்­கும் வகை­யில் காலணி உற்­பத்தி தொழிற்­சாலைக்­கான சிப்­காட் தொழிற்­பேட்­டைக்கு அடிக்­கல் நாட்­டி­னார். தொடர்ந்து, வார­ணவாசி கிரா­மத்­தில் உள்ள அங்­கன் வாடிமையத்­தில்,ஊட்­டச்­சத்து குறைபாடு உடைய குழந்­தைக­ளுக்கு ஊட்­டச்­சத்து பெட்­ட­கத்தை வழங்­கி­னார். இந்­நி­கழ்ச்­சி­யில், அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், எம்­எல்­ஏ க்­கள், உள்ளாட்சி பிர­தி­நி­தி­கள் மற்­றும் அரசு உயர் அலு­வலர்­கள் கலந்து கொண்­ட­னர்.