அஸ்லாம் சேக் ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம்

கடந்த 13ம்தேதி எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள், மும்பை(மே) காங்கிரஸ் வேட்பாளர், மூன்று முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக,உத்தவ் சிவசேனா ஆட்சி காலத்தில் மராட்டிய மாநில அமைச்சராக பணியாற்றிய மாண்புமிகு: அஸ்லாம் சேக் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.காச்படா,பண்டார் வாடா,ஒர்லாம்,சீரிலங்கபடா,ராயப்படா,மால்வானி,காரோடி,ராத்தோடி போன்ற இடங்களில் பிரச்சாரம் செய்தார்.
எழுச்சி தமிழர் சென்ற இடமெல்லாம் தமிழ் மக்கள் அலைகடனெ திரண்டு ஆர்ப்பரித்து வரவேற்று..திரு.அஸ்லாம் சேக் வெற்றி பெற உதவுவதாக கூறினர்.
எழுச்சி தமிழரின் வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு அரணாக”தமிழன் உதயம்”குழுமத்தின் மும்பை பகுதி செய்தியாளர்கள் திரு.எகால்:தோமாஸ்,கோட்ட மருதூர்,திரு.அல்போன்ஸ்,அவருடன் இந்தியா கூட்டணி கட்சியினரும் உடன் இருந்தனர்.
மலாடு(மே) சட்டமன்ற வேட்பாளர் திரு.அஸ்லாம் சேக்& தமிழ்நாடு, மும்பை கிறிஸ்துவ மண் ஒட்டர் சமுதாய சங்க தலைவர் விரியூர்,திரு.அந்தோணிசாமி போன்றோர் பொதுகூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.மாலை வேலையில் ஆரே காலனி தமிழ் உறவுகள் ஏற்பாடு செய்து இருந்த பொது கூட்டத்திலும் எழுச்சி தமிழர் தொல்‌.திருமா கலந்து கொண்டார்.
15ம் தேதி, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.விஜய்.வசந்,திரு: அஸ்லாம் சேக் அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.மும்பை தேர்தல் களம், இந்தியா கூட்டணி தலைவர்களின் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் வெற்றி முகம் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
மும்பையில் இருந்து நமது துணை ஆசிரியர்..,
பெ.எலியாஸ்,
“தமிழன் உதயம்”