கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு வடக்கு மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் பாஸ்கர் என்பவர் வாகனத்தை ஓட்ட சரண்யா, இவரது இரண்டு குழந்தைகள் பின்னால் அமர்ந்து கொண்டு வந்த போது மழைக்காக இருசக்கர வாகனம் சாலையோரமாக ஒதுங்கி நின்றது. அப்போது பருத்தி ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லோடு வாகனம் எதிர்பாராமல் சரண்யாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் சரண்யா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த பாஸ்கர் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த இரண்டு குழந்தைகள் பலத்த காயமுடன் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லோடு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தப்பி ஓடினர். போலீசார் விபத்து சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






