வங்­கக்­க­டலில் அடுத்த 48 மணி நேரத்­தில் புதிய காற்­ற­ழுத்த தாழ்வுப்­பகுதி!

சென்னை, நவ. 9 தென்­மேற்கு வங்­கக்­கடல் மற்­றும் மன்­னார் வளை­குடா பகு­தி­க­ளின்மேல் நில­வும் வளி­மண்­டல சுழற்­சி­யில் இருந்துவரும் ஈரப்­பத காற்று,வட இந்­திய பகு­தி­க­ளில் இருந்து வீசும் வறண்ட காற்று ஆகி­ய­வற்­றால் ஏற்­ப­டும் காற்று குவி­த­லால் தமிழ்­நாட்­டில் பல்­வேறு இடங்­க­ளில் மித­மான மழை முதல்கன­மழை பெய்து வரு­கி­றது.இதற்­கி­டை­யில், தென்­கி­ழக்கு அர­பிக்­கடல் மற்­றும் அதனை ஒட்­டியலட்சத்­தீ­வுப்­ப­கு­தி­க­ளின் மேல் நில­வும் வளி­மண்­டல கீழ­டுக்கு சுழற்சி கார­ணமாக தமிழ்­நாட்­டில் இன்று முதல் 10ம் தேதிவரை ஓரிரு இடங்­க­ளில் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்­றும், நெல்லை,தூத்­துக்­குடி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டங்­க­ளில் இன்று கன முதல் மிககன­மழை பெய்­யக்­கூ­டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரி­வித்து இருந்­தது.இந்த நிலை­யில், தென்­மேற்கு வங்­கக்­கட­லில் அடுத்த 48 மணி நேரத்­தில் புதிய காற்­ற­ழுத்ததாழ்­வுப்­ப­குதி உரு­வா­கி­றது என்று வானிலை ஆய்வுமையம் தெரி­வித்­துள்­ளது. இது 11, 12ம்தேதி­க­ளில் மேற்கு திசையில் தமி­ழ­கம் -இலங்கைகடலோ­ரப் பகு­தி­களை நோக்கி மெது­வாக நக­ரக்­கூ­டும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் காற்­ற­ழுத்த தாழ்­வுப்­ப­குதிவலு­வான காற்று சுழற்­சி­யா­கவோஅல்­லது தாழ்­வுப் பகு­தி­யாகவோ மாறி தமிழ்­நாட்டில் வட­கி­ழக்கு பரு­வ­மழையை தீவி­ரப்­ப­டுத்­தும் என எதிர்­பார்க்கப்­ப­டு­கி­றது.