தூத்துக்குடி 2024- 2025
தமிழக சட்டப்பேரவையின் திட்ட மதிப்பீட்டு குழு கூட்டம் தூத்துக்குடியில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. மதிப்பீட்டு குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற நிகழ்வில் மாவட்டம் முழுவதும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதில் மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களில் ஒருவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் எஸ். எஸ். பாலாஜி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். குறிப்பாக திருச்செந்தூர் பாதாளச் சாக்கடை சுத்திகரிப்பு ஆலையின் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நகராட்சி அலுவலர்களிடமும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடமும் ஆலையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி இல்லாமல் ஆலையை இயக்குவதை கண்டித்தார். மேலும் இப்பிரச்சினையால் தமிழக அரசுக்கு அவப்பெயர் உண்டாவதை தடுத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என எச்சரித்தார். அண்ணன் அவர்கள் பேசி முடித்ததும் மதிப்பீட்டு குழுத் தலைவர் 10 நாட்களில் அந்த ஆலை குறித்த அறிக்கையை தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்வு முடிந்ததும் அண்ணன் அவர்களுக்கும், உடன் வந்திருந்த துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் கலைவேந்தன் அவர்களுக்கும் அனைவரும் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தோம். அண்ணன் அவர்களும் அவரது மகனுக்கான திருமண அழைப்பிதழை அனைவருக்கும் வழங்கினார்.






