சேத்தியாத்தோப்பு அருகே அரசு பேருந்து வாய்க்காலில் இறங்கி விபத்து!

 

சேத்தியாத்தோப்பு அருகே அரசு பேருந்து வாய்க்காலில் இறங்கி விபத்து

ஸ்டியரிங் ராடு கட்டானதால் கட்டுப்பாட்டை இழந்தது

பேருந்தில் பயணித்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே கரைமேடு கிராமப் பகுதியில் உள்ள வாய்க்காலில் சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி இயக்கப்பட்ட அரசு பேருந்து தடம் எண் 399 வாய்க்காலில் இறங்கி விபத்து ஏற்பட்டது. அரசு பேருந்து ஸ்டியரிங் ராடு கட்டானதால் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் இறங்கியது. இதில் பேருந்தில் வந்த 40க்கு மேற்பட்ட பயணிகள் நல்வாய்ப்பாக லேசான அடியுடன் உயிர்த்தப்பினர். பேருந்தில் வந்த பயணிகள் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் பழுதான அரசு பேருந்துகளை இயக்கி அரசு பேருந்து பயணிகளை வேதனைப்படுத்துவதாக பொதுமக்களும் பேருந்து பணிகளும் கடுமையான குற்றச்சாட்டு வைத்துள்ளனர். சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அதிக போக்குவரத்து நிறைந்த சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தானது 25-10-2024
காலை 8.10 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. தற்போது பண்டிகை காலம் ஆதலால் எல்லோரும் அரசு பேருந்துகளை நம்பி தான் நீண்ட தூரம் பயணம் செய்கின்றனர். இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும் போது அரசு பேருந்துகளை திட்டமிட்டே பராமரிக்காமல் இயக்கி பயணிகளை அச்சுறுத்தி வருவதாக பேருந்து பயணிகள் கடுமையான குற்றச்சாட்டை வேதனையோடு தெரிவித்து வருகின்றனர். இனிமேலாவது அரசு பேருந்துகள் அனைத்தும் சரியாக பராமரிக்கப்பட்டு பழுது நீக்கி இயக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.