தேனியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 551 நபர்களுக்கு பணிநியமன ஆணை: மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சி.பி.ஏ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் அவர்கள் முன்னிலையில் 551 நபர்களுக்கு    தனியார் துறை பணி நியமன ஆணைகளை 19.10.2024 அன்று வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியதாவது,படித்த இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்றால்தான் தமிழ்நாடு தொழில்துறையில் வளர்ச்சி பெறும் என்பதை நன்கு அறிந்து படித்த இளைஞர்கள் அனைவருக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கித்தரும் வகையில் பல்வேறு சிறப்பு நடவடிக்கை கள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.வேலை நாடுனர்களையும் மற்றும் தனியார் நிறுவனங்களையும் இணைக்கும் பாலமாக இந்த வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்  பட்டு வருகின்றன.இம்முகாமில் தமிழகம் முழுவதிலும் இருந்து 100க்கு மேற்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். வேலைத் தேடும் இளைஞர்கள் இது போன்று நடைபெ று ம் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதன் மூலம், தனியார் நிறுவனங்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும். நவீன தொழில் நுட்ப திறன்கள் மூலம் தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறனாளர்களாக மாற்றி வேலைவாய்ப்பு கிடைப்பதற் கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும்,புதிதாக தொழில் தொடங்க விரும்பும் இளைஞர் களுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.தொழில் முனைவோர்களை ஊக்குவிப் பதற்கான தமிழ்நாடுஅரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பல்வேறு அரசு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது  TNPSC G-II முதன்மை தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சி மையத்தில் பயின்ற மாணவர்கள் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றன. இத்தகைய வாய்ப்பினையும் வேலைதேடும் இளைஞர்கள் பயன்படுத்தி ,போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசுத்துறைகளில் வேலை பெறலாம்.இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த மாதிரி அமைத்துக்க கொள்ள வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது.அதனை சிறந்த முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ராமபிரபா (தேனி), அருண்நேரு(இராம நாதபுரம் ) , கல்லூரி முதல்வர் சிவக்குமார், செயலாளர் புருசோத்தமன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.