விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சேர்மகாதேவி பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கேட்டதை எதிர்த்து மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவி பேரூராட்சிக்கு உட்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கொழுந்து மாமலை பகுதிகளில் கல்குவாரி அமைக்க அனுமதி கேட்பதாக அறிந்தோம் இந்த மலைப்பகுதி இயற்கை வளம் சூழ்ந்த வனவிலங்குகள் வாழும் பகுதியாகவும் அருகில் கல்வி நிலையங்கள், கோவில் மற்றும் மக்கள் குடியிருக்கும் பகுதியாகவும் உள்ளது. இந்த இடத்தில் கல்குவாரி அமைத்தால் இயற்கை வளங்கள் வனவிலங்குகள் அழிவதோடு பொதுமக்கள் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகும் மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பெரும் உயிர்சேதம் ஏற்படும், வெடிவைத்து பாறைகளை தகர்த்தும்போது சுற்றி உள்ள குடியிருப்பு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும், ஏற்கனவே நிலத்தடி நீர் 500 அடி கீழ் சென்று விட்டது மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெறும் அச்சுறுத்தலாக அமையும், எனவே இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்க விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. சேரன்மகாதேவி ஒன்றிய செயலாளர் மாதவன், சேரன்மகாதேவி நகர செயற்குழு உறுப்பினர் சசிகுமார், பத்தமடை நகரச் செயலாளர் நடராஜன், பத்தமடை நகர செயற்குழு உறுப்பினர் கான்சா முகைதீன், பத்தமடை முகாம் செயலாளர் முத்து மணி, மாணவரணி ஒன்றிய அமைப்பாளர் வருண்குமார் மற்றும் பிரதீப்குமார் ஆகியோர் மனுவை அளித்தனர்.