தூத்துக்குடி :தூத்துக்குடியில் அதிமுகமுன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ ¨ மற்றும்
எஸ்.பி .வேலு மணி உட்பட அவர்களின் ஆதரவாளர்கள் மீது ஆறுமுகநேரி பகுதியைச்சேர்ந்த மத போதகர் ஜெகன் என்பவர் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து விளாத்திகுளத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ இந்த வழக்கு பதிவிற்கு தனது கண்டனத்தை தெரிவித்ததோடு,மனிதாபிமானத் தோடு செயல் பட்டதற்கு தங்கள் மீதுவழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக விளக்கமளித்து பேசினார்.மேலும் எதிர்கட்சியை பணிசெய்ய விடக்கூடாது என்று முடக்குவதற்காகத்தான் ஆளுங்கட்சியினர் இதுபோன்று செயல் படுகின்றனர் என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், ஒன்றியச்செயலாளர்கள் மகேஷ் மற்றும் பால் ராஜ் ஏற்பாட்டில்,விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் முன்னிலையில்,மாபெரும் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு எதிர்கட்சித்துணைப்பொதுச்செயலாளர்
நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னாள் அமைச்சரும் ,தற்போதைய கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு கட்சியினரிடைய சிறப்புரையாற்றினார்.
அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “ நானும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் திருச்செந்தூரிலிருந்து வந்துகொண்டிருந்த போது தங்களதுகாருக்கு முன்னால் சென்ற காரை ஓட்ட தெரியாமல் தாறுமாறாக ஒரு நபர் ஒட்டி சென்றதாகவும் சிறிது தூரத்தில் நான்கு வழிச்சாலையில் அந்தகாருக்கு முன்னால் வழிமறித்து ஒரு இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அந்தக் காரை ஓட்டி வந்து நபரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும், வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதால்…நானும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் அங்கு சென்று கேட்டதற்கு… இருசக்கர வாகனத்தில் வந்த நபர்தங்களை இந்த கார் மோதும் படிவந்ததாக கூறியுள்ளனர்.இதையடுத்து அந்த பைக்கில் வந்த நபர்களையும், இந்த கார்
ஓட்டிய வரையும் இது போன்று நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் என்று பேசி
சமாதானம் செய்து சரியாக காரை ஓட்டி நல்ல படியாக போய் சேருங்கள் என அனுப்பி வைத்தோம்“ என்றும், “இந்த நபர் கிறிஸ்டியன், பாதிரியார் என்ப தெல்லாம் ஒன்றும் தெரியாது, ஒரு சம்பவம் நடக்கிறது அதை வேடிக்கை மட்டும்பார்த்து விட்டு போனால் என்ன மனிதாபி மானம் இருக்கும்… ஒருபொறுப்புள்ளவங்க, அதிலும் நாங்கள் அமைச்சராக இருந்திருக்கிறோம், தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறோம்.. வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களை பேசி அனுப்பி வைத்தோம், இதை செய்ததில் என்ன தப்பு இருக்கிறது?” என்று விளக்கம் அளித்துப் பேசினார்.அது மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்ட அமைச்சரானகீதாஜீவனின் பேட்டிக்கு பதிலாக… “உங்களுக்கு அரசியல் செய்வதற்கு வேறு பிரச்சினை இல்லையா… மதத்தை யும் ,சாதியையும் வைத்தா அரசியல் பன்றது? என்ன நடந்தது என்று விசாரிக்கமலேயே இது போன்று பேசுவதா? ” என்று ஆவேசமடைந்தார்.
அமைச்சர் கீதாஜீவன் மதத்தையும், சாதியையும் வைத்தா அரசியல் பன்றது?முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்!






