சென்­னை­யில் 2 நாட்­கள் தீபாவளி சிறப்பு இயற்கை சந்தை தமிழக அரசு!

சென்னை, அக்.18 தமி­ழக அரசு வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் கூறி­யி­ருப்­ப­தா­வது:தமிழ்­நாடு மக­ளிர் மேம்­பாட்டு நிறு­வ­னத்­தின் வழி­காட்­டு­த­லில் செயல்­ப­டும் தமிழ்­நாடு மாநில ஊரக வாழ் ­வா­தார இயக்­கம்,ஊர­கம் மற்­றும் நகர்ப்­புற பகு­தி­யில் உள்ள மக­ளிர் சுயஉத­விக் குழுக்­கள் உற்­பத்தி செய்­யும் பொருட்­களை நகரபகு­தி­யில் விற்­பனை செய்ய ஏது­வாக பல்­வேறு புதிய முயற்­சி­களை மேற்கொண்டு வரு­கி­றது.அதன் ஒருபகு­தி­யாக ஒவ்­வொரு மாத­மும் முதல் மற்­றும் மூன்­றாம் சனி மற்­றும் ஞாயிறு ஆகியகிழ­மைக­ளில் சென்னை,நுங்­கம்­பாக்­கம்,அன்னைதெரசா மக­ளிர் வளா­கத்­தில் இயற்கை சந்தை நடத்­தப்­ப­டு­கி­றது.அதன் தொடர்ச்­சி­யாக,தீபா­வளி பண்­டி­கையை முன்­னிட்டு 19.10.2024(சனிக்­கி­ழமை) மற்­றும்20.10.2024 (ஞாயிற்­றுக்கி­ழமை)தீபா­வளி சிறப்பு இயற்கை சந்தை நடைபெற உள்­ளது. இந்த இயற்கை சந்­தை­யில் தமிழ்­நாட்­டில் பல்­வேறு மாவட்­டங்­க­ளில் செயல்­ப­டும் மக­ளிர் சுய உத­விக்குழுக்­கள் உற்­பத்தி செய்­யும் புத்­தம் புதிய ஆடைகள், காஞ்­சி­பு­ரம் பட்டுசேலைகள், சேலம் இளம்­பிள்ளை சேலைகள்,பட்டு வேட்டி, சட்­டைகள், விரு­து­ந­கர் காட்­டன் புட­வைகள், அரி­ய­லூர் வாரி­யங்­கா­வல் காட்­டன்புட­வைகள், கோயம்­புத்­தூர் நெக­மம் சேலைகள்,திரு­நெல்­வேலி மற்­றும் தென்­காசி மாவட்­டங்­க­ளில் தயா­ரிக்­கப்­ப­டும் நைட்­டி­கள், ஈரோடு போர்­வைகள் மற்­றும் துண்­டு­கள், திருப்­பூர் டிசர்ட் போன்ற தீபா­வளி பண்­டி­கைக்கு தேவை­யா­ன­அ­னைத்து ஆடைவகைக­ளும் மற்­றும் இயற்கை சார்ந்த பொருட்­களான பாரம்­ப­ரிய அரி­சி­கள், சிறு­தா­னிய மற்­றும் சிறு­தா­னிய மதிப்புகூட்டுபொருட்­கள், காய்­க­றி­கள் மற்­றும் கீரைகள், பனைஒலைபொருட்­கள் ­போன்ற இயற்­கை­யு­டன் சார்ந்த பொருட்­க­ளும் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன.மேலும் மக­ளிர் சுய உத­விக்­குழு உறுப்­பி­னர்­க­ளால் தயார் செய்­யப்­படும் பல்­சுவை உணவு பொருட்­க­ளும் இந்த இயற்கை சந்­தை­யில் விற்­ப­னை செய்­யப்­ப­டு­கின்­றன. எனவே பொது­மக்கள் அனை­வ­ரும் இயற்கை சந்­தைக்கு வருகை தந்து,மக­ளிர் சுயஉத­விக் குழுக்­க­ளின் தர­மான உற்­பத்தி பொருட்­களை வாங்கி மகிழ அன்­பு­டன் அழைக்­கின்றோம். இவ்வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.