“மழைநீர் வடிகால் பணிகள் கைகொடுத்ததால் சென்னையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது” மேயர் பிரியா

சென்னை, அக்.17 “அரசின் மழைநீர் வடிகால் பணிகள், சிறப்பான முறையில் கைகொடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்தால், ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.அதன் பிறகு தான், அந்த தண்ணீர் வெளியேற்றப்படும். ஆனால், இன்று ஒரே இரவில் மழைநீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றால்,அதற்கு தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம்” என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா கூறியுள்ளார்.சென்  னையில் மேயர்பிரியா செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது: “சென்னையைப்பொருத்தவரை, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 24 மணிநேரம் தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. 20 செ.மீ மழைபதிவாகியிருக்கிறது. நேற்றுஇரவு முழுவதும் அனைத்து பணியாளர்களுமே களத்தில் இருந்தனர் . இதனால் பல இடங்களில் மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. இதனால், சென்னையின் பிரதான சாலைகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. அப்பகுதியில்
பொதுமக்கள் வாகனங்களில் செல்வதைக் காண முடிகிறது.பகுதியைப் பொருத்தவரை, சென்னை புளியந்தோப்பு அது ஒரு தாழ்வானபகுதி. எனவே, அப்பகுதிமக்களுக்கு முன்னெச் சரிக்கை கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் மாற்று இடங்களில் தங்கினர். ஒருசிலர் தங்களது குடியிருப்புகளிலேயே இருப்பதாக தகவல் தெரிவித் தனர். நேற்று அந்தப்பகுதியில் கிட்டத்தட்ட இடுப்பளவு தண்ணீர் தேங்கி நின்றது. நேற்றிரவு மழைநின்ற பிறகு, அந்தப்பகுதியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டுள் ளோம். விரைவில் அப்பகுதியில் இருந்து தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படும். அரசின் மழைநீர் வடிகால் பணிகால் பணிகள், சிறப்பான முறையில் மழை நீரை அகற்றும் பணிகளில் கை கொடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்தால், ஒருவாரம் முதல் பத்து நாட்கள் வரை தண்ணீர் தேங்கி நிற்கும்.அதன்  பிறகு தான், அந்த தண்ணீர் வெளியேற்றப்படும்.ஆனால், இன்று ஒரே இரவில் மழைநீர் வடிந்து மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்கள் என்றால்,அதற்கு தமிழக முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம். ” என்று அவர் கூறினார்.