ஒரே நாளில் குடிநீர் குழாய் அமைத்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார் அமைச்சர்!

திருச்சி
திருவெறும்பூர்

திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, மண்டலம் மூன்று 41ஆவது வார்டு நொச்சிவயல்புதூர் மாரீஸ்நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று, ஒரே நாளில் குடிநீர் குழாய் அமைத்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இந்நிகழ்வில் அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர் இந்நிகழ்வில் மண்டலம் மூன்றின் தலைவர்
மு மதிவாணன் மாமன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் பகுதி கழகச் செயலாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.