புத்தகத் திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கானவர்களின் உழைப்பு தான் காரணம்.! கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு!

தமிழர்களின் பண்பாடு,கலை , நாகரிகம் போன்றவற்றைப் பறை சாற்றும் வகையில் திமுக துணைப்பொதுச் செயலாளரும்,நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில்,மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக் – கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி 3வது நெய்தல் கலை விழா – உணவுத்திருவிழா தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் சங்கரப்பேரி விலக்கு பகுதியில் உள்ள திடலில் அக்டோபர் 11 ஆம் தேதி கோலாகலமாகத் துவங்கியது. தூத்துக்குடி  புத்தகத்திருவிழா மற்றும் நெய்தல் கலை திருவிழா – 2024 நிறைவு நாளான (13/10/2024) திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற குழுத்தலைவருமான கனி மொழிகருணாநிதி கலந்து கொண்டு, விழா சிறப்பாக நடக்க உழைத்த அரசியல் தலைவர்கள்,   அரசு அலுவலர்கள், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உள்ளிட்டோரைச்சால்வை அணிவித்துக் கௌரவித்து, பரிசுகளை வழங்கினார். 1,500 புகைப்படங்கள் தேர்வு புகைப்பட கண்காட்சியில், செய்யப்பட்டு அதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் மிகச்சிறந்த புகைப் படத்திற்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம் வெற்றி பெற்ற ரூபன் ராஜ், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வெற்றி பெற்ற வே.சரவணகுமார் (அ ) ஜியோ ஷரவண், 8நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரத் தைக் கனிமொழி கருணாநிதி எம்.பிவழங்கினார். மேலும், 1 8வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 8 நபர்களுக்குப் பரிசாக ரூ.10ஆயிரம் வழங்கினார்.நிறைவு விழாவில் பேசிய கனிமொழி கருணா நிதி எம்.பி: இந்த புத்தகக் கண்காட்சிக்கான பணிகள் தொடங்கிக் கொண்டு இருந்த நேரத்தில், நமதுமாவட்டத்திற்குப் புதிதாக ஒருமாவட்ட ஆட்சியர் வருகிறார் என்று தெரிவித்தார் கள். அந்த மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் என்று சொன்ன பொழுது இனிமேல்புத்தகக் கண் காட்சிகளைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். தமிழ் நாட்டில் இந்த அளவிற்குப் புத்தகக்கண்காட்சிகள் வெற்றிகரமாக நடை பெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கக் கூடியவர்.தூத்துக்குடி புத்தகக்கண்காட்சியை இவ்வளவு சிறப்பாக, ஆயிரக் கணக்கான மாணவர்கள் வந்து கலந்து கொள்ளக்கூடிய வகையில் நடைபெறக் காரணமானவர். இப்படிப்பட்ட ஒரு சிறப்பானபுத்தகத் திருவிழா, நெய்தல் கலை விழா,உணவுத்திருவிழா என அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒன்றாகக் கொண்டு வந்து வெற்றியோடு நடத்த வேண்டும் என்றால், அதில் நூற்றுக்கணக்கானவர்கள் பணியாற்றினால் தான் அது சாத்தியமாகும். இந்த நிகழ்ச்சியை வெற்றி பெறச்செய்த அத்தனை பேருக்கும்
எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நெய்தல் கலை திருவிழாவின் கடைசி நாளான இன்று தூத்துக்குடி இசைப் பள்ளிகலை நிகழ்ச்சி, சஹாகலைக்குழு, உவரி கழியல் குழு, ஜெட் கிங்களரி குழு, ஜிக்காட்டம் கலைக்குழு,பாப்பம் பட்டி பெரிய மேளம், கார்த்திக் தேவராஜ் ஆர்கெஸ்டிரா ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள்  குடும்பங்களுடன் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்தனர்.தெற்கு மாவட்ட திமுக இந்த விழாவில், தூத்துக்குடி செயலாளரும், மீன்வளம் -மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சருமான அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், ஓட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா,விளாத்தி குளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி.வி. மார் கண்டையன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மது பாலன், தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன்,தூத்துக்குடி கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் இரா.ஐஸ்வர்யா, நபார்டு மண்டல மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், கிரீன் ஸ்டார் நிறுவன இயக்குநர் செந்தில் நாயகம், அருண் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.நெய்தல் கலைத் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300 க்கும்- மேற் பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை திறமைகளைவெளிப்படுத்தினர். நெய்தல்திருவிழாவின் ஒரு பகுதி யாகத் தமிழர்களின் பாரம் பரிய உணவுகள், தமிழ்நாட்டின் பல பகுதிகளின் தனித்துவமான
உணவுகள் எனப் பலவகையான உணவுகளை மக்கள் உண்டு மகிழும் வகையில் 50 க்கும் மேற் பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
மேலும் , நபார்டு சார்பைக 60 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு மட்டு மல்லா மல் இந்தியா முழுவதும் தயாரிக்கப்படும் கைவினைபொருட்கள் , கைத்தறி பொருட்கள்,  சிறு தானியங்கள் மூலம் செய்யப் பட்டுள்ள உணவுப் பொருட்கள், இயற்கை வேளாண் பொருட்கள் போன்ற தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்கு அமைக்கப்பட்டிருந்தன.இவைகளை மக்கள் ஆர்வமுடன்பார்வையிட்டதுடன்,பொருட்களை வாங்கிச்சென்றனர்.